1 ULB தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். BSB BSB: When David was old and full of years, he installed his son Solomon as king over Israel.
2 ULB இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான். BSB BSB: Then he gathered all the leaders of Israel, as well as the priests and Levites.
3 ULB அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம். BSB BSB: The Levites thirty years of age or older were counted, and the total number of men was 38,000.
4 ULB அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர்கள் தலைவர்களும் அலுவலர்களும் என்றும், BSB BSB: “Of these,” said David, “24,000 are to oversee the work of the house of the LORD, 6,000 are to be officers and judges,
5 ULB நான்காயிரம்பேர்கள் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர்கள் கர்த்தரைத் துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, BSB BSB: 4,000 are to be gatekeepers, and 4,000 are to praise the LORD with the instruments I have made for giving praise.”
6 ULB அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான். BSB BSB: Then David divided the Levites into divisions according to the sons of Levi: Gershon, Kohath, and Merari.
7 ULB கெர்சோனியர்களில், லாதானும், சிமேயும் இருந்தார்கள். BSB BSB: The Gershonites: Ladan and Shimei.
8 ULB லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்கள்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான். BSB BSB: The sons of Ladan: Jehiel the first, Zetham, and Joel—three in all.
9 ULB சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்கள்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள். BSB BSB: The sons of Shimei: Shelomoth, Haziel, and Haran—three in all. These were the heads of the families of Ladan.
10 ULB யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சிமேயின் மகன்களாக இருந்தார்கள். BSB BSB: And the sons of Shimei: Jahath, Zina, Jeush, and Beriah. These were the sons of Shimei—four in all.
11 ULB யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள். BSB BSB: Jahath was the first and Zizah was the second; but Jeush and Beriah did not have many sons, so they were counted as one family and received a single assignment.
12 ULB கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்கள். BSB BSB: The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uzziel—four in all.
13 ULB அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள். BSB BSB: The sons of Amram: Aaron and Moses. Aaron and his descendants were set apart forever to consecrate the most holy things, to burn incense before the LORD, to minister before Him, and to pronounce blessings in His name forever.
14 ULB தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள். BSB BSB: As for Moses the man of God, his sons were named among the tribe of Levi.
15 ULB மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள். BSB BSB: The sons of Moses: Gershom and Eliezer.
16 ULB கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான். BSB BSB: The descendants of Gershom: Shebuel was the first.
17 ULB எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள். BSB BSB: The descendants of Eliezer: Rehabiah was the first. Eliezer did not have any other sons, but the sons of Rehabiah were very numerous.
18 ULB இத்சாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான். BSB BSB: The sons of Izhar: Shelomith was the first.
19 ULB எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம். BSB BSB: The sons of Hebron: Jeriah was the first, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
20 ULB ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா. BSB BSB: The sons of Uzziel: Micah was the first and Isshiah the second.
21 ULB மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள். BSB BSB: The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.
22 ULB எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள். BSB BSB: Eleazar died without having any sons; he had only daughters. Their cousins, the sons of Kish, married them.
23 ULB மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்கள். BSB BSB: The sons of Mushi: Mahli, Eder, and Jeremoth—three in all.
24 ULB தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். BSB BSB: These were the descendants of Levi by their families—the heads of families, registered individually by name—those twenty years of age or older who worked in the service of the house of the LORD.
25 ULB இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும், BSB BSB: For David had said, “The LORD, the God of Israel, has given rest to His people and has come to dwell in Jerusalem forever.
26 ULB இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும், BSB BSB: So now the Levites no longer need to carry the tabernacle or any of the articles for its service.”
27 ULB தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். BSB BSB: For according to the final instructions of David, the Levites twenty years of age or older were counted,
28 ULB அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும், BSB BSB: but their duty was to assist the descendants of Aaron with the service of the house of the LORD, being responsible for the courts and chambers, the purification of all the holy things, and the work of the service of the house of God,
29 ULB சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும், BSB BSB: as well as for the rows of the showbread, the fine flour for the grain offering, the wafers of unleavened bread, the baking, the mixing, and all measurements of quantity and size.
30 ULB நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும், BSB BSB: They were also to stand every morning to give thanks and praise to the LORD, and likewise in the evening.
31 ULB எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும், BSB BSB: Whenever burnt offerings were presented to the LORD on the Sabbaths, New Moons, and appointed feasts, they were to serve regularly before the LORD in the numbers prescribed for them.
32 ULB ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது. BSB BSB: So the Levites were to carry out the responsibilities for the Tent of Meeting and the Holy Place, and, under their brothers the descendants of Aaron, the service of the house of the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.