1 ULB ரூபன் இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்த மூத்தமகன் ஆவான்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய படுக்கையைத் தீட்டுப்படுத்தியதால், கோத்திரத்து அட்டவணையில் அவன் முதற்பிறப்பவனாக கருதப்படாமல், அவனுடைய மூத்த மகன் என்கிற பிறப்புரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது. BSB BSB: These were the sons of Reuben the firstborn of Israel. Though he was the firstborn, his birthright was given to the sons of Joseph son of Israel, because Reuben defiled his father’s bed. So he is not reckoned according to birthright.
2 ULB யூதா தன்னுடைய சகோதரர்களிலே பலவானாக இருந்ததால் தலைமைத்துவம் அவனுடைய சந்ததியில் உண்டானது; ஆகிலும் மூத்தமகன் என்கிற பிறப்புரிமை யோசேப்பிற்குரியதாக மாறினது. BSB BSB: And though Judah prevailed over his brothers and a ruler came from him, the birthright belonged to Joseph.
3 ULB இஸ்ரவேலின் முதலில் பிறந்தவனான ரூபனின் மகன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். BSB BSB: The sons of Reuben, the firstborn of Israel: Hanoch, Pallu, Hezron, and Carmi.
4 ULB யோவேலின் மகன்களில் ஒருவன் செமாயா; இவனுடைய மகன் கோக்; இவனுடைய மகன் சிமேய். BSB BSB: The descendants of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son,
5 ULB இவனுடைய மகன் மீகா; இவனுடைய மகன் ராயா; இவனுடைய மகன் பாகால். BSB BSB: Micah his son, Reaiah his son, Baal his son,
6 ULB இவனுடைய மகன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான். BSB BSB: and Beerah his son, whom Tiglath-pileser king of Assyria carried into exile. Beerah was a leader of the Reubenites.
7 ULB தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும், BSB BSB: His relatives by their clans are recorded in their genealogy: Jeiel the chief, Zechariah,
8 ULB யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் மகன் பேலாவும்; இவனுடைய சந்ததியார் ஆரோவேரிலும், நேபோவரை, பாகால்மெயோன்வரை தங்கியிருந்தார்கள். BSB BSB: and Bela son of Azaz, the son of Shema, the son of Joel. They settled in Aroer and as far as Nebo and Baal-meon.
9 ULB கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்திரத்தின் எல்லைவரை அவர்கள் தங்கியிருந்தார்கள்; அவர்களுடைய ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியானது. BSB BSB: They also settled in the east as far as the edge of the desert that extends to the Euphrates River, because their livestock had increased in the land of Gilead.
10 ULB சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள். BSB BSB: During the days of Saul they waged war against the Hagrites, who were defeated at their hands, and they occupied the dwellings of the Hagrites throughout the region east of Gilead.
11 ULB காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காவரை தங்கியிருந்தார்கள். BSB BSB: The descendants of Gad lived next to the Reubenites in the land of Bashan, as far as Salecah:
12 ULB அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள். BSB BSB: Joel was the chief, Shapham the second, then Jaanai and Shaphat, who lived in Bashan.
13 ULB அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்கள். BSB BSB: Their kinsmen by families were Michael, Meshullam, Sheba, Jorai, Jacan, Zia, and Eber—seven in all.
14 ULB இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் மகன்கள்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் மகன்களாக இருந்தவர்கள். BSB BSB: These were the sons of Abihail son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz.
15 ULB கூனியின் மகனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவனாக இருந்தான். BSB BSB: Ahi son of Abdiel, the son of Guni, was head of their family.
16 ULB அவர்கள் கீலேயாத்தில் இருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாக் குடியிருப்புக்களிலும் அவைகளின் எல்லைவரை தங்கியிருந்தார்கள். BSB BSB: They lived in Gilead, in Bashan and its towns, and throughout the pasturelands of Sharon.
17 ULB இவர்களெல்லோரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்களுடைய வம்சத்து அட்டவணைப்படி வரிசைப்படுத்தப்பட்டார்கள். BSB BSB: All of them were recorded in the genealogies during the reigns of Jotham king of Judah and Jeroboam king of Israel.
18 ULB ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேர்களாக இருந்தார்கள். BSB BSB: The Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh had 44,760 warriors—valiant men who carried the shield and sword, drew the bow, and were trained for battle.
19 ULB அவர்கள் ஆகாரியர்களோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்செய்கிறபோது, BSB BSB: They waged war against the Hagrites, as well as Jetur, Naphish, and Nodab.
20 ULB அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார். BSB BSB: And because they cried out to God in battle, they were helped against their enemies, and the Hagrites and all their allies were delivered into their hands. Because they put their trust in God, He answered their prayers.
21 ULB அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள். BSB BSB: They seized the livestock of the Hagrites—50,000 camels, 250,000 sheep, and 2,000 donkeys. They also took 100,000 captives,
22 ULB யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள். BSB BSB: and many others fell slain, because the battle belonged to God. And they occupied the land until the exile.
23 ULB மனாசேயின் பாதிக்கோத்திரம் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன்வரை, செனீர்வரை, எர்மோன் பர்வதம்வரை பெருகியிருந்தார்கள். BSB BSB: Now the people of the half-tribe of Manasseh were numerous. They settled in the land from Bashan to Baal-hermon (that is, Senir, also known as Mount Hermon).
24 ULB அவர்கள் தங்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவர்களாகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரர்களான மனிதர்களும் பெயர்பெற்ற தலைவர்களுமாக இருந்தார்கள். BSB BSB: These were the heads of their families: Epher, Ishi, Eliel, Azriel, Jeremiah, Hodaviah, and Jahdiel. They were mighty men of valor, famous men, and heads of their families.
25 ULB அவர்கள் தங்களுடைய பிதாக்களின் தேவனுக்கு துரோகம்செய்து, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச மக்களின் தேவர்களைப் பின்பற்றி கெட்டுப்போனார்கள். BSB BSB: But they were unfaithful to the God of their fathers, and they prostituted themselves with the gods of the peoples of the land, whom God had destroyed before them.
26 ULB ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான். BSB BSB: So the God of Israel stirred up the spirit of Pul king of Assyria (that is, Tiglath-pileser king of Assyria) to take the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh into exile. And he brought them to Halah, Habor, Hara, and the river of Gozan, where they remain to this day.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.