1 ULB கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: BSB BSB: And David sang this song to the LORD on the day the LORD had delivered him from the hand of all his enemies and from the hand of Saul.
2 ULB கர்த்தர் என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகரும் ஆனவர். BSB BSB: He said: “The LORD is my rock, my fortress, and my deliverer.
3 ULB தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னுடைய இருப்பிடமும், என்னுடைய இரட்சகருமானவர்; என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. BSB BSB: My God is my rock, in whom I take refuge, my shield, and the horn of my salvation. My stronghold, my refuge, and my Savior, You save me from violence.
4 ULB துதிக்குக் காரணரான கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன். BSB BSB: I will call upon the LORD, who is worthy to be praised; so shall I be saved from my enemies.
5 ULB மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. BSB BSB: For the waves of death engulfed me; the torrents of chaos overwhelmed me.
6 ULB பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. BSB BSB: The cords of Sheol entangled me; the snares of death confronted me.
7 ULB எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது. BSB BSB: In my distress I called upon the LORD; I cried out to my God. And from His temple He heard my voice, and my cry for help reached His ears.
8 ULB அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. BSB BSB: Then the earth shook and quaked; the foundations of the heavens trembled; they were shaken because He burned with anger.
9 ULB அவர் நாசியிலிருந்து புகை வந்தது, அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, அதனால் தீப்பற்றிக்கொண்டது. BSB BSB: Smoke rose from His nostrils, and consuming fire came from His mouth; glowing coals blazed forth.
10 ULB வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. BSB BSB: He parted the heavens and came down with dark clouds beneath His feet.
11 ULB கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார். BSB BSB: He mounted a cherub and flew; He soared on the wings of the wind.
12 ULB வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். BSB BSB: He made darkness a canopy around Him, a gathering of water and thick clouds.
13 ULB அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. BSB BSB: From the brightness of His presence coals of fire blazed forth.
14 ULB கர்த்தர் வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். BSB BSB: The LORD thundered from heaven; the voice of the Most High resounded.
15 ULB அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்து, மின்னல்களை உபயோகித்து, அவர்களைச் சிதறடித்தார். BSB BSB: He shot His arrows and scattered the foes; He hurled lightning and routed them.
16 ULB கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. BSB BSB: The channels of the sea appeared, and the foundations of the world were exposed at the rebuke of the LORD, at the blast of the breath of His nostrils.
17 ULB உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். BSB BSB: He reached down from on high and took hold of me; He drew me out of deep waters.
18 ULB என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார். BSB BSB: He rescued me from my powerful enemy, from foes too mighty for me.
19 ULB என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாக இருந்தார். BSB BSB: They confronted me in my day of calamity, but the LORD was my support.
20 ULB என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். BSB BSB: He brought me out into the open; He rescued me because He delighted in me.
21 ULB கர்த்தர் என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். BSB BSB: The LORD has rewarded me according to my righteousness; He has repaid me according to the cleanness of my hands.
22 ULB கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. BSB BSB: For I have kept the ways of the LORD and have not wickedly departed from my God.
23 ULB அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல், BSB BSB: For all His ordinances are before me; I have not disregarded His statutes.
24 ULB அவருக்கு முன்பாக மனஉண்மையாக இருந்து, பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். BSB BSB: And I have been blameless before Him and kept myself from iniquity.
25 ULB ஆகையால் கர்த்தர் என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார். BSB BSB: So the LORD has repaid me according to my righteousness, according to my cleanness in His sight.
26 ULB தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், BSB BSB: To the faithful You show Yourself faithful, to the blameless You show Yourself blameless;
27 ULB புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். BSB BSB: to the pure You show Yourself pure, but to the crooked You show Yourself shrewd.
28 ULB சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது. BSB BSB: You save an afflicted people, but Your eyes are on the haughty to bring them down.
29 ULB கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; கர்த்தர் என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர். BSB BSB: For You, O LORD, are my lamp; the LORD lights up my darkness.
30 ULB உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். BSB BSB: For in You I can charge an army; with my God I can scale a wall.
31 ULB தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் சுத்தமானது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். BSB BSB: As for God, His way is perfect; the word of the LORD is flawless. He is a shield to all who take refuge in Him.
32 ULB கர்த்தரைத் தவிர தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? BSB BSB: For who is God besides the LORD? And who is the Rock except our God?
33 ULB தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். BSB BSB: God is my strong fortress, and He makes my way clear.
34 ULB அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார். BSB BSB: He makes my feet like those of a deer and stations me upon the heights.
35 ULB வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குகிறார். BSB BSB: He trains my hands for battle; my arms can bend a bow of bronze.
36 ULB உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும். BSB BSB: You have given me Your shield of salvation, and Your gentleness exalts me.
37 ULB என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். BSB BSB: You broaden the path beneath me so that my ankles do not give way.
38 ULB என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை அழிக்கும்வரையும் திரும்பமாட்டேன். BSB BSB: I pursued my enemies and destroyed them; I did not turn back until they were consumed.
39 ULB அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறியடித்து வெட்டினேன். BSB BSB: I devoured and crushed them so they could not rise; they have fallen under my feet.
40 ULB யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர். BSB BSB: You have armed me with strength for battle; You have subdued my foes beneath me.
41 ULB நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் பின்கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். BSB BSB: You have made my enemies retreat before me; I destroyed those who hated me.
42 ULB அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை. BSB BSB: They looked, but there was no one to save them—to the LORD, but He did not answer.
43 ULB அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன். BSB BSB: I ground them as the dust of the earth; I crushed and trampled them like mud in the streets.
44 ULB என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள். BSB BSB: You have delivered me from the strife of my people; You have preserved me as the head of nations; a people I had not known shall serve me.
45 ULB அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். BSB BSB: Foreigners cower before me; when they hear me, they obey me.
46 ULB அந்நியர்கள் பயந்துபோய், தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள். BSB BSB: Foreigners lose heart and come trembling from their strongholds.
47 ULB கர்த்தர் ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக. BSB BSB: The LORD lives, and blessed be my Rock! And may God, the Rock of my salvation, be exalted—
48 ULB அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். BSB BSB: the God who avenges me and brings down nations beneath me,
49 ULB அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். BSB BSB: who frees me from my enemies. You exalt me above my foes; You rescue me from violent men.
50 ULB இதனால் கர்த்தாவே, தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன். BSB BSB: Therefore I will praise You, O LORD, among the nations; I will sing praises to Your name.
51 ULB தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார். BSB BSB: Great salvation He brings to His king. He shows loving devotion to His anointed, to David and his descendants forever.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.