1 ULB நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் காயப்படுத்திக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்செய்யாமலும் இருப்பீர்களாக. BSB BSB: You are sons of the LORD your God; do not cut yourselves or shave your foreheads on behalf of the dead,
2 ULB நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான மக்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா மக்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்தமான மக்களாயிருக்கத் தெரிந்துகொண்டார். BSB BSB: for you are a people holy to the LORD your God. The LORD has chosen you to be a people for His prized possession out of all the peoples on the face of the earth.
3 ULB அருவருப்பான ஒன்றையும் சாப்பிடவேண்டாம். BSB BSB: You must not eat any detestable thing.
4 ULB நீங்கள் சாப்பிடுவதற்கேற்ற மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், BSB BSB: These are the animals that you may eat: The ox, the sheep, the goat,
5 ULB மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், மலை ஆடுகளுமே. BSB BSB: the deer, the gazelle, the roe deer, the wild goat, the ibex, the antelope, and the mountain sheep.
6 ULB மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் சாப்பிடலாம்; BSB BSB: You may eat any animal that has a split hoof divided in two and that chews the cud.
7 ULB அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முயலும், குழிமுயலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. BSB BSB: But of those that chew the cud or have a completely divided hoof, you are not to eat the following: the camel, the rabbit, or the rock badger. Although they chew the cud, they do not have a divided hoof. They are unclean for you,
8 ULB பன்றியும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக. BSB BSB: as well as the pig; though it has a divided hoof, it does not chew the cud. It is unclean for you. You must not eat its meat or touch its carcass.
9 ULB தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம். BSB BSB: Of all the creatures that live in the water, you may eat anything with fins and scales,
10 ULB துடுப்பும் செதிளும் இல்லாத யாதொன்றையும் சாப்பிடக்கூடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. BSB BSB: but you may not eat anything that does not have fins and scales; it is unclean for you.
11 ULB சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம். BSB BSB: You may eat any clean bird,
12 ULB நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், BSB BSB: but these you may not eat: the eagle, the bearded vulture, the black vulture,
13 ULB பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், BSB BSB: the red kite, the falcon, any kind of kite,
14 ULB சகலவித காகங்களும், BSB BSB: any kind of raven,
15 ULB தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், BSB BSB: the ostrich, the screech owl, the gull, any kind of hawk,
16 ULB ஆந்தையும், கோட்டானும், நாரையும், BSB BSB: the little owl, the great owl, the white owl,
17 ULB கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், BSB BSB: the desert owl, the osprey, the cormorant,
18 ULB கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே. BSB BSB: the stork, any kind of heron, the hoopoe, or the bat.
19 ULB பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள். BSB BSB: All flying insects are unclean for you; they may not be eaten.
20 ULB சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம். BSB BSB: But you may eat any clean bird.
21 ULB தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். BSB BSB: You are not to eat any carcass; you may give it to the foreigner residing within your gates, and he may eat it, or you may sell it to a foreigner. For you are a holy people belonging to the LORD your God. You must not cook a young goat in its mother’s milk.
22 ULB நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, BSB BSB: You must be sure to set aside a tenth of all the produce brought forth each year from your fields.
23 ULB உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக. BSB BSB: And you are to eat a tenth of your grain, new wine, and oil, and the firstborn of your herds and flocks, in the presence of the LORD your God at the place He will choose as a dwelling for His Name, so that you may learn to fear the LORD your God always.
24 ULB உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால், BSB BSB: But if the distance is too great for you to carry that with which the LORD your God has blessed you, because the place where the LORD your God will choose to put His Name is too far away,
25 ULB அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய், BSB BSB: then exchange it for money, take the money in your hand, and go to the place the LORD your God will choose.
26 ULB அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக. BSB BSB: Then you may spend the money on anything you desire: cattle, sheep, wine, strong drink, or anything you wish. You are to feast there in the presence of the LORD your God and rejoice with your household.
27 ULB லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே. BSB BSB: And do not neglect the Levite within your gates, since he has no portion or inheritance among you.
28 ULB மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். BSB BSB: At the end of every three years, bring a tenth of all your produce for that year and lay it up within your gates.
29 ULB லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். BSB BSB: Then the Levite (because he has no portion or inheritance among you), the foreigner, the fatherless, and the widow within your gates may come and eat and be satisfied. And the LORD your God will bless you in all the work of your hands.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.