1 ULB ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக. BSB BSB: “You are to build an altar of acacia wood. The altar must be square, five cubits long, five cubits wide, and three cubits high.
3 ULB அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக. BSB BSB: Make all its utensils of bronze—its pots for removing ashes, its shovels, its sprinkling bowls, its meat forks, and its firepans.
4 ULB வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி, BSB BSB: Construct for it a grate of bronze mesh, and make a bronze ring at each of the four corners of the mesh.
5 ULB அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும். BSB BSB: Set the grate beneath the ledge of the altar, so that the mesh comes halfway up the altar.
6 ULB பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும். BSB BSB: Additionally, make poles of acacia wood for the altar and overlay them with bronze.
7 ULB பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும். BSB BSB: The poles are to be inserted into the rings so that the poles are on two sides of the altar when it is carried.
8 ULB அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச்செய்யவேண்டும். BSB BSB: Construct the altar with boards so that it is hollow. It is to be made just as you were shown on the mountain.
9 ULB ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். BSB BSB: You are also to make a courtyard for the tabernacle. On the south side of the courtyard make curtains of finely spun linen, a hundred cubits long on one side,
10 ULB அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். BSB BSB: with twenty posts and twenty bronze bases, and silver hooks and bands on the posts.
11 ULB அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். BSB BSB: Likewise there are to be curtains on the north side, a hundred cubits long, with twenty posts and twenty bronze bases, and with silver hooks and bands on the posts.
12 ULB பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். BSB BSB: The curtains on the west side of the courtyard shall be fifty cubits wide, with ten posts and ten bases.
13 ULB சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாக இருக்கவேண்டும். BSB BSB: The east side of the courtyard, toward the sunrise, is to be fifty cubits wide.
14 ULB அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். BSB BSB: Make the curtains on one side fifteen cubits long, with three posts and three bases,
15 ULB மறுபக்கத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். BSB BSB: and the curtains on the other side fifteen cubits long, with three posts and three bases.
16 ULB பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும். BSB BSB: The gate of the courtyard shall be twenty cubits long, with a curtain embroidered with blue, purple, and scarlet yarn, and finely spun linen. It shall have four posts and four bases.
17 ULB சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும். BSB BSB: All the posts around the courtyard shall have silver bands, silver hooks, and bronze bases.
18 ULB பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும். BSB BSB: The entire courtyard shall be a hundred cubits long and fifty cubits wide, with curtains of finely spun linen five cubits high, and with bronze bases.
19 ULB ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும். BSB BSB: All the utensils of the tabernacle for every use, including all its tent pegs and the tent pegs of the courtyard, shall be made of bronze.
20 ULB குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு. BSB BSB: And you are to command the Israelites to bring you pure oil of pressed olives for the light, to keep the lamps burning continually.
21 ULB கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும். BSB BSB: In the Tent of Meeting, outside the veil that is in front of the Testimony, Aaron and his sons are to tend the lamps before the LORD from evening until morning. This is to be a permanent statute for the Israelites for the generations to come.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.