1 ULB நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். BSB BSB: This is the account of Noah’s sons Shem, Ham, and Japheth, who also had sons after the flood.
2 ULB யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். BSB BSB: The sons of Japheth: Gomer, Magog, Madai, Javan, Tubal, Meshech, and Tiras.
3 ULB கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். BSB BSB: The sons of Gomer: Ashkenaz, Riphath, and Togarmah.
4 ULB யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். BSB BSB: And the sons of Javan: Elishah, Tarshish, the Kittites, and the Rodanites.
5 ULB இவர்களால் மக்களுடைய தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன. BSB BSB: From these, the maritime peoples separated into their territories, according to their languages, by clans within their nations.
6 ULB காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். BSB BSB: The sons of Ham: Cush, Mizraim, Put, and Canaan.
7 ULB கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள். BSB BSB: The sons of Cush: Seba, Havilah, Sabtah, Raamah, and Sabteca. And the sons of Raamah: Sheba and Dedan.
8 ULB கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். BSB BSB: Cush was the father of Nimrod, who began to be a mighty one on the earth.
9 ULB இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டானது. BSB BSB: He was a mighty hunter before the LORD; so it is said, “Like Nimrod, a mighty hunter before the LORD.”
10 ULB சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள். BSB BSB: His kingdom began in Babylon, Erech, Accad, and Calneh, in the land of Shinar.
11 ULB அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், BSB BSB: From that land he went forth into Assyria, where he built Nineveh, Rehoboth-Ir, Calah,
12 ULB நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். BSB BSB: and Resen, which is between Nineveh and the great city of Calah.
13 ULB மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், BSB BSB: Mizraim was the father of the Ludites, the Anamites, the Lehabites, the Naphtuhites,
14 ULB பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான். BSB BSB: the Pathrusites, the Casluhites (from whom the Philistines came), and the Caphtorites.
15 ULB கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், BSB BSB: And Canaan was the father of Sidon his firstborn, and of the Hittites,
16 ULB எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், BSB BSB: the Jebusites, the Amorites, the Girgashites,
17 ULB ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீநியர்களையும், BSB BSB: the Hivites, the Arkites, the Sinites,
18 ULB அர்வாதியர்களையும், செமாரியர்களையும், காமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள். BSB BSB: the Arvadites, the Zemarites, and the Hamathites. Later the Canaanite clans were scattered,
19 ULB கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது. BSB BSB: and the borders of Canaan extended from Sidon toward Gerar as far as Gaza, and then toward Sodom, Gomorrah, Admah, and Zeboiim, as far as Lasha.
20 ULB இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர். BSB BSB: These are the sons of Ham according to their clans, languages, lands, and nations.
21 ULB சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான். BSB BSB: And sons were also born to Shem, the older brother of Japheth; Shem was the forefather of all the sons of Eber.
22 ULB சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். BSB BSB: The sons of Shem: Elam, Asshur, Arphaxad, Lud, and Aram.
23 ULB ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள். BSB BSB: The sons of Aram: Uz, Hul, Gether, and Mash.
24 ULB அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான். BSB BSB: Arphaxad was the father of Shelah, and Shelah was the father of Eber.
25 ULB ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். BSB BSB: Two sons were born to Eber: One was named Peleg, because in his days the earth was divided, and his brother was named Joktan.
26 ULB யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், BSB BSB: And Joktan was the father of Almodad, Sheleph, Hazarmaveth, Jerah,
27 ULB அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், BSB BSB: Hadoram, Uzal, Diklah,
28 ULB ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், BSB BSB: Obal, Abimael, Sheba,
29 ULB ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள். BSB BSB: Ophir, Havilah, and Jobab. All these were sons of Joktan.
30 ULB இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது. BSB BSB: Their territory extended from Mesha to Sephar, in the eastern hill country.
31 ULB இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர். BSB BSB: These are the sons of Shem, according to their clans, languages, lands, and nations.
32 ULB தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர். BSB BSB: All these are the clans of Noah’s sons, according to their generations and nations. From these the nations of the earth spread out after the flood.