2 ULB அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். BSB BSB: Male and female He created them, and He blessed them. And in the day they were created, He called them “man.”
4 ULB ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Seth, Adam lived 800 years and had other sons and daughters.
5 ULB ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் தொளாயிரத்துமுப்பது வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Adam lived a total of 930 years, and then he died.
6 ULB சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். BSB BSB: When Seth was 105 years old, he became the father of Enosh.
7 ULB சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Enosh, Seth lived 807 years and had other sons and daughters.
8 ULB சேத்துடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Seth lived a total of 912 years, and then he died.
9 ULB ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். BSB BSB: When Enosh was 90 years old, he became the father of Kenan.
10 ULB ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, எண்ணூற்றுப் பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Kenan, Enosh lived 815 years and had other sons and daughters.
11 ULB ஏனோசுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருடங்கள், அவன் இறந்தான். BSB BSB: So Enosh lived a total of 905 years, and then he died.
12 ULB கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான். BSB BSB: When Kenan was 70 years old, he became the father of Mahalalel.
13 ULB கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Mahalalel, Kenan lived 840 years and had other sons and daughters.
14 ULB கேனானுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Kenan lived a total of 910 years, and then he died.
15 ULB மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். BSB BSB: When Mahalalel was 65 years old, he became the father of Jared.
16 ULB மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Jared, Mahalalel lived 830 years and had other sons and daughters.
17 ULB மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Mahalalel lived a total of 895 years, and then he died.
18 ULB யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். BSB BSB: When Jared was 162 years old, he became the father of Enoch.
19 ULB யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Enoch, Jared lived 800 years and had other sons and daughters.
20 ULB யாரேதுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Jared lived a total of 962 years, and then he died.
22 ULB ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Methuselah, Enoch walked with God 300 years and had other sons and daughters.
23 ULB ஏனோக்குடைய நாட்களெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருடங்கள். BSB BSB: So Enoch lived a total of 365 years.
24 ULB ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். BSB BSB: Enoch walked with God, and then he was no more, because God had taken him away.
25 ULB மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். BSB BSB: When Methuselah was 187 years old, he became the father of Lamech.
26 ULB மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Lamech, Methuselah lived 782 years and had other sons and daughters.
27 ULB மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Methuselah lived a total of 969 years, and then he died.
28 ULB லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒருமகனைப் பெற்றெடுத்து, BSB BSB: When Lamech was 182 years old, he had a son.
29 ULB கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். BSB BSB: And he named him Noah, saying, “May this one comfort us in the labor and toil of our hands caused by the ground that the LORD has cursed.”
30 ULB லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். BSB BSB: And after he had become the father of Noah, Lamech lived 595 years and had other sons and daughters.
31 ULB லாமேக்குடைய நாட்களெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருடங்கள்; அவன் இறந்தான். BSB BSB: So Lamech lived a total of 777 years, and then he died.
32 ULB நோவா ஐந்நூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான். BSB BSB: After Noah was 500 years old, he became the father of Shem, Ham, and Japheth.