1 ULB எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. BSB BSB: Ephraim feeds on the wind and pursues the east wind all day long; he multiplies lies and violence; he makes a covenant with Assyria and sends olive oil to Egypt.
2 ULB யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். BSB BSB: The LORD has a charge to bring against Judah. He will punish Jacob according to his ways and repay him according to his deeds.
3 ULB அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். BSB BSB: In the womb he grasped his brother’s heel, and in his vigor he wrestled with God.
4 ULB அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். BSB BSB: Yes, he struggled with the angel and prevailed; he wept and sought His favor; he found Him at Bethel and spoke with Him there—
5 ULB கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம். BSB BSB: the LORD God of Hosts, the LORD is His name of renown.
6 ULB இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. BSB BSB: But you must return to your God; maintain love and justice, and always wait on your God.
7 ULB அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான். BSB BSB: A merchant loves to defraud with dishonest scales in his hands.
8 ULB எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். BSB BSB: And Ephraim boasts: “How rich I have become! I have found wealth for myself. In all my labors, they can find in me no iniquity that is sinful.”
9 ULB உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், மீண்டும் உன்னைக் கூடாரங்களில் தங்கியிருக்கச்செய்வேன். BSB BSB: But I am the LORD your God ever since the land of Egypt. I will again make you dwell in tents, as in the days of the appointed feast.
10 ULB அப்படியே தீர்க்கதரிசிகளுடன் சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை கொடுத்தேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன். BSB BSB: I spoke through the prophets and multiplied their visions; I gave parables through the prophets.
11 ULB கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது. BSB BSB: Is there iniquity in Gilead? They will surely come to nothing. Do they sacrifice bulls in Gilgal? Indeed, their altars will be heaps of stones in the furrows of the field.
12 ULB யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். BSB BSB: Jacob fled to the land of Aram and Israel worked for a wife—for a wife he tended sheep.
13 ULB கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். BSB BSB: But by a prophet the LORD brought Israel out of Egypt, and by a prophet he was preserved.
14 ULB எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார். BSB BSB: Ephraim has provoked bitter anger, so his Lord will leave his bloodguilt upon him and repay him for his contempt.