1 ULB கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே குடியிருக்கச்செய்வார்; அந்நியரும் அவர்களுடன் சேர்ந்து, யாக்கோபின் வம்சத்துடன் இணைந்து கொள்வார்கள். BSB BSB: For the LORD will have compassion on Jacob; once again He will choose Israel and settle them in their own land. The foreigner will join them and unite with the house of Jacob.
2 ULB மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் இடத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள். BSB BSB: The nations will escort Israel and bring it to its homeland. Then the house of Israel will possess the nations as menservants and maidservants in the LORD’s land. They will make captives of their captors and rule over their oppressors.
3 ULB கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தவிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறச் செய்யும் அக்காலத்திலே, BSB BSB: On the day that the LORD gives you rest from your pain and torment, and from the hard labor into which you were forced,
4 ULB நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! தங்க நகரம் ஒழிந்துபோனதே! BSB BSB: you will sing this song of contempt against the king of Babylon: How the oppressor has ceased, and how his fury has ended!
5 ULB கர்த்தர் தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். BSB BSB: The LORD has broken the staff of the wicked, the scepter of the rulers.
6 ULB மிகுந்த கோபங்கொண்டு ஓய்வில்லாமல் மக்களை அடித்து, கோபமாக மக்களை அரசாண்டவன், தடுக்க யாருமில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான். BSB BSB: It struck the peoples in anger with unceasing blows; it subdued the nations in rage with relentless persecution.
7 ULB பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாக முழங்குகிறார்கள். BSB BSB: All the earth is at peace and at rest; they break out in song.
8 ULB தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது. BSB BSB: Even the cypresses and cedars of Lebanon exult over you: “Since you have been laid low, no woodcutter comes against us.”
9 ULB கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. BSB BSB: Sheol beneath is eager to meet you upon your arrival. It stirs the spirits of the dead to greet you—all the rulers of the earth. It makes all the kings of the nations rise from their thrones.
10 ULB அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள். BSB BSB: They will all respond to you, saying, “You too have become weak, as we are; you have become like us!”
11 ULB உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. BSB BSB: Your pomp has been brought down to Sheol, along with the music of your harps. Maggots are your bed and worms your blanket.
12 ULB அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! BSB BSB: How you have fallen from heaven, O day star, son of the dawn! You have been cut down to the ground, O destroyer of nations.
13 ULB நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும், BSB BSB: You said in your heart: “I will ascend to the heavens; I will raise my throne above the stars of God. I will sit on the mount of assembly, in the far reaches of the north.
14 ULB நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. BSB BSB: I will ascend above the tops of the clouds; I will make myself like the Most High.”
15 ULB ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். BSB BSB: But you will be brought down to Sheol, to the lowest depths of the Pit.
16 ULB உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து, BSB BSB: Those who see you will stare; they will ponder your fate: “Is this the man who shook the earth and made the kingdoms tremble,
17 ULB உலகத்தை வனாந்திரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள். BSB BSB: who turned the world into a desert and destroyed its cities, who refused to let the captives return to their homes?”
18 ULB தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். BSB BSB: All the kings of the nations lie in state, each in his own tomb.
19 ULB நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் ஆடையைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்கு வெளியே எறிந்துவிடப்பட்டாய். BSB BSB: But you are cast out of your grave like a rejected branch, covered by those slain with the sword, and dumped into a rocky pit like a carcass trampled underfoot.
20 ULB நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை. BSB BSB: You will not join them in burial, since you have destroyed your land and slaughtered your own people. The offspring of the wicked will never again be mentioned.
21 ULB அவன் சந்ததியார் எழும்பித் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாமலிருக்க, அவர்கள் முன்னோர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் செய்யுங்கள். BSB BSB: Prepare a place to slaughter his sons for the iniquities of their forefathers. They will never rise up to possess a land or cover the earth with their cities.
22 ULB நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்; பாபிலோனுடைய பெயரையும், அதில் மீதியாக இருக்கிறதையும், சந்ததியையும் பின்சந்ததியையும் அழிப்பேனென்று கர்த்தர் சொல்கிறார். BSB BSB: “I will rise up against them,” declares the LORD of Hosts. “I will cut off from Babylon her name and her remnant, her offspring and her posterity,” declares the LORD.
23 ULB அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். BSB BSB: “I will make her a place for owls and for swamplands; I will sweep her away with the broom of destruction,” declares the LORD of Hosts.
24 ULB நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார். BSB BSB: The LORD of Hosts has sworn: “Surely, as I have planned, so will it be; as I have purposed, so will it stand.
25 ULB அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும். BSB BSB: I will break Assyria in My land; I will trample him on My mountain. His yoke will be taken off My people, and his burden removed from their shoulders.”
26 ULB தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார். BSB BSB: This is the plan devised for the whole earth, and this is the hand stretched out over all the nations.
27 ULB சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்? BSB BSB: The LORD of Hosts has purposed, and who can thwart Him? His hand is outstretched, so who can turn it back?
28 ULB ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்: BSB BSB: In the year that King Ahaz died, this burden was received:
29 ULB முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று சந்தோஷப்படாதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும். BSB BSB: Do not rejoice, all you Philistines, that the rod that struck you is broken. For a viper will spring from the root of the snake, and a flying serpent from its egg.
30 ULB தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாகச் சாப்பிட்டு, எளியவர்கள் சுகமாகப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகும்படிசெய்வேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான். BSB BSB: Then the firstborn of the poor will find pasture, and the needy will lie down in safety, but I will kill your root by famine, and your remnant will be slain.
31 ULB வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுவதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை. BSB BSB: Wail, O gate! Cry out, O city! Melt away, all you Philistines! For a cloud of smoke comes from the north, and there are no stragglers in its ranks.
32 ULB இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே. BSB BSB: What answer will be given to the envoys of that nation? “The LORD has founded Zion, where His afflicted people will find refuge.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.