1 ULB அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக: BSB BSB: Then Eliphaz the Temanite replied:
2 ULB ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? BSB BSB: “Can a man be of use to God? Can even a wise man benefit Him?
3 ULB நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? BSB BSB: Does it delight the Almighty that you are righteous? Does He profit if your ways are blameless?
4 ULB அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ? BSB BSB: Is it for your reverence that He rebukes you and enters into judgment against you?
5 ULB உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? BSB BSB: Is not your wickedness great? Are not your iniquities endless?
6 ULB காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். BSB BSB: For you needlessly demanded security from your brothers and deprived the naked of their clothing.
7 ULB மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர். BSB BSB: You gave no water to the weary and withheld food from the famished,
8 ULB பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான். BSB BSB: while the land belonged to a mighty man, and a man of honor lived on it.
9 ULB விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது. BSB BSB: You sent widows away empty-handed, and the strength of the fatherless was crushed.
10 ULB ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. BSB BSB: Therefore snares surround you, and sudden peril terrifies you;
11 ULB நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. BSB BSB: it is so dark you cannot see, and a flood of water covers you.
12 ULB தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. BSB BSB: Is not God as high as the heavens? Look at the highest stars, how lofty they are!
13 ULB நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? BSB BSB: Yet you say: ‘What does God know? Does He judge through thick darkness?
14 ULB அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். BSB BSB: Thick clouds veil Him so He does not see us as He traverses the vault of heaven.’
15 ULB அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ? BSB BSB: Will you stay on the ancient path that wicked men have trod?
16 ULB காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. BSB BSB: They were snatched away before their time, and their foundations were swept away by a flood.
17 ULB தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். BSB BSB: They said to God, ‘Depart from us. What can the Almighty do to us?’
18 ULB ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. BSB BSB: But it was He who filled their houses with good things; so I stay far from the counsel of the wicked.
19 ULB எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். BSB BSB: The righteous see it and are glad; the innocent mock them:
20 ULB குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். BSB BSB: ‘Surely our foes are destroyed, and fire has consumed their excess.’
21 ULB நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும். BSB BSB: Reconcile now and be at peace with Him; thereby good will come to you.
22 ULB அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். BSB BSB: Receive instruction from His mouth, and lay up His words in your heart.
23 ULB நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். BSB BSB: If you return to the Almighty, you will be restored. If you remove injustice from your tents
24 ULB அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். BSB BSB: and consign your gold to the dust and the gold of Ophir to the stones of the ravines,
25 ULB அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். BSB BSB: then the Almighty will be your gold and the finest silver for you.
26 ULB அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். BSB BSB: Surely then you will delight in the Almighty and lift up your face to God.
27 ULB நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். BSB BSB: You will pray to Him, and He will hear you, and you will fulfill your vows.
28 ULB நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். BSB BSB: Your decisions will be carried out, and light will shine on your ways.
29 ULB மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். BSB BSB: When men are brought low and you say, ‘Lift them up!’ then He will save the lowly.
30 ULB குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான் என்றான். BSB BSB: He will deliver even one who is not innocent, rescuing him through the cleanness of your hands.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.