2 ULB பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். BSB BSB: For You granted Him authority over all people, so that He may give eternal life to all those You have given Him.
4 ULB பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன். BSB BSB: I have glorified You on earth by accomplishing the work You gave Me to do.
6 ULB நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள். BSB BSB: I have revealed Your name to those You have given Me out of the world. They were Yours; You gave them to Me, and they have kept Your word.
7 ULB நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். BSB BSB: Now they know that everything You have given Me comes from You.
8 ULB நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். BSB BSB: For I have given them the words You gave Me, and they have received them. They knew with certainty that I came from You, and they believed that You sent Me.
9 ULB நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே. BSB BSB: I ask on their behalf. I do not ask on behalf of the world, but on behalf of those You have given Me; for they are Yours.
10 ULB என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். BSB BSB: All I have is Yours, and all You have is Mine; and in them I have been glorified.
11 ULB நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். BSB BSB: I will no longer be in the world, but they are in the world, and I am coming to You. Holy Father, protect them by Your name, the name You gave Me, so that they may be one as We are one.
12 ULB நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. BSB BSB: While I was with them, I protected and preserved them by Your name, the name You gave Me. Not one of them has been lost, except the son of destruction, so that the Scripture would be fulfilled.
13 ULB இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன். BSB BSB: But now I am coming to You; and I am saying these things while I am in the world, so that they may have My joy fulfilled within them.
14 ULB நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. BSB BSB: I have given them Your word and the world has hated them. For they are not of the world, just as I am not of the world.
15 ULB நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். BSB BSB: I am not asking that You take them out of the world, but that You keep them from the evil one.
16 ULB நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை. BSB BSB: They are not of the world, just as I am not of the world.
17 ULB உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். BSB BSB: Sanctify them by the truth; Your word is truth.
18 ULB நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். BSB BSB: As You sent Me into the world, I have also sent them into the world.
19 ULB அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். BSB BSB: For them I sanctify Myself, so that they too may be sanctified by the truth.
21 ULB அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். BSB BSB: that all of them may be one, as You, Father, are in Me, and I am in You. May they also be in Us, so that the world may believe that You sent Me.
22 ULB நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். BSB BSB: I have given them the glory You gave Me, so that they may be one as We are one—
23 ULB ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். BSB BSB: I in them and You in Me—that they may be perfectly united, so that the world may know that You sent Me and have loved them just as You have loved Me.
24 ULB பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன். BSB BSB: Father, I want those You have given Me to be with Me where I am, that they may see the glory You gave Me because You loved Me before the foundation of the world.
25 ULB நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். BSB BSB: Righteous Father, although the world has not known You, I know You, and they know that You sent Me.
26 ULB நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். BSB BSB: And I have made Your name known to them and will continue to make it known, so that the love You have for Me may be in them, and I in them.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.