1 ULB இஸ்ரவேல் மக்கள் கடந்துபோகும்வரைக்கும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததை, யோர்தானுக்கு மேற்குப்பகுதியில் குடியிருந்த எமோரியர்களின் எல்லா ராஜாக்களும், சமுத்திரத்தின் அருகே குடியிருந்த கானானியர்களின் எல்லா ராஜாக்களும் கேட்டதுமுதல், அவர்களுடைய இருதயம் கரைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக சோர்ந்துபோனார்கள். BSB BSB: Now when all the Amorite kings west of the Jordan and all the Canaanite kings along the coast heard how the LORD had dried up the waters of the Jordan before the Israelites until they had crossed over, their hearts melted and their spirits failed for fear of the Israelites.
2 ULB அந்தக் காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கூர்மையான கத்திகளை உண்டாக்கி, மீண்டும் இரண்டாம்முறை இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய் என்றார். BSB BSB: At that time the LORD said to Joshua, “Make flint knives and circumcise the sons of Israel once again.”
3 ULB அப்பொழுது யோசுவா கூரான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்செய்தான். BSB BSB: So Joshua made flint knives and circumcised the sons of Israel at Gibeath-haaraloth.
4 ULB யோசுவா இப்படி விருத்தசேதனம்செய்த நோக்கம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஆண்மக்களாகிய யுத்த மனிதர்கள் எல்லோரும் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே இறந்துபோனார்கள். BSB BSB: Now this is why Joshua circumcised them: All those who came out of Egypt—all the men of war—had died on the journey in the wilderness after they had left Egypt.
5 ULB எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டப்பின்பு, வழியில் வனாந்திரத்திலே பிறந்த எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள். BSB BSB: Though all who had come out were circumcised, none of those born in the wilderness on the journey from Egypt had been circumcised.
6 ULB கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த மனிதர்களான எல்லோரும் இறக்கும்வரைக்கும், இஸ்ரவேல் மக்கள் நாற்பதுவருடங்கள் வனாந்திரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் செய்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். BSB BSB: For the Israelites had wandered in the wilderness forty years, until all the nation’s men of war who had come out of Egypt had died, since they did not obey the LORD. So the LORD vowed never to let them see the land He had sworn to their fathers to give us, a land flowing with milk and honey.
7 ULB அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்களுடைய ஆண் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்செய்தான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்செய்யாததினால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்படாமலிருந்தார்கள். BSB BSB: And He raised up their sons in their place, and these were the ones Joshua circumcised. Until this time they were still uncircumcised, since they had not been circumcised along the way.
8 ULB மக்கள் எல்லோரும் விருத்தசேதனம்செய்யப்பட்டபின்பு, அவர்கள் குணமாகும்வரைக்கும் தங்கள்தங்கள் இடத்திலே முகாமில் தங்கியிருந்தார்கள். BSB BSB: And after all the nation had been circumcised, they stayed there in the camp until they were healed.
9 ULB கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இல்லாதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த இடம் இந்த நாள்வரைக்கும் கில்கால் எனப்படுகிறது. BSB BSB: Then the LORD said to Joshua, “Today I have rolled away the reproach of Egypt from you.” So that place has been called Gilgal to this day.
10 ULB இஸ்ரவேல் மக்கள் கில்காலில் முகாமிட்டிருந்து, மாதத்தின் பதினான்காம் தேதி மாலைநேரத்திலே எரிகோவின் சமவெளிகளிலே பஸ்காவை அனுசரித்தார்கள். BSB BSB: On the evening of the fourteenth day of the month, while the Israelites were camped at Gilgal on the plains of Jericho, they kept the Passover.
11 ULB பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் சாப்பிட்டார்கள். BSB BSB: The day after the Passover, on that very day, they ate unleavened bread and roasted grain from the produce of the land.
12 ULB அவர்கள் தேசத்தின் தானியத்தைச் சாப்பிட்ட மறுநாளிலே மன்னா பெய்யாமல் நின்றுபோனது; அதுமுதல் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்தின் பலனை அந்த வருடத்திலே சாப்பிட்டார்கள். BSB BSB: And the day after they had eaten from the produce of the land, the manna ceased. There was no more manna for the Israelites, so that year they began to eat the crops of the land of Canaan.
13 ULB பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவிய பட்டயம் அவருடைய கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ அல்லது எங்களுடைய சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். BSB BSB: Now when Joshua was near Jericho, he looked up and saw a man standing in front of him with a drawn sword in His hand. Joshua approached Him and asked, “Are You for us or for our enemies?”
14 ULB அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாக இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தம்முடைய ஊழியனான எனக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். BSB BSB: “Neither,” He replied. “I have now come as Commander of the LORD’s army.” Then Joshua fell facedown in reverence and asked Him, “What does my Lord have to say to His servant?”
15 ULB அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான். BSB BSB: The Commander of the LORD’s army replied, “Take off your sandals, for the place where you are standing is holy.” And Joshua did so.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.