1 ULB ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான். BSB BSB: I am the man who has seen affliction under the rod of God’s wrath.
2 ULB அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார். BSB BSB: He has driven me away and made me walk in darkness instead of light.
3 ULB அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார். BSB BSB: Indeed, He keeps turning His hand against me all day long.
4 ULB என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். BSB BSB: He has worn away my flesh and skin; He has shattered my bones.
5 ULB அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார். BSB BSB: He has besieged me and surrounded me with bitterness and hardship.
6 ULB ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார். BSB BSB: He has made me dwell in darkness like those dead for ages.
7 ULB நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார். BSB BSB: He has walled me in so I cannot escape; He has weighed me down with chains.
8 ULB நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார். BSB BSB: Even when I cry out and plead for help, He shuts out my prayer.
9 ULB வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். BSB BSB: He has barred my ways with cut stones; He has made my paths crooked.
10 ULB அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். BSB BSB: He is a bear lying in wait, a lion hiding in ambush.
11 ULB என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார். BSB BSB: He forced me off my path and tore me to pieces; He left me without help.
12 ULB தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். BSB BSB: He bent His bow and set me as the target for His arrow.
13 ULB தம்முடைய அம்புப்பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். BSB BSB: He pierced my kidneys with His arrows.
14 ULB நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன். BSB BSB: I am a laughingstock to all my people; they mock me in song all day long.
15 ULB கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார். BSB BSB: He has filled me with bitterness; He has intoxicated me with wormwood.
16 ULB அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார். BSB BSB: He has ground my teeth with gravel and trampled me in the dust.
17 ULB என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். BSB BSB: My soul has been deprived of peace; I have forgotten what prosperity is.
18 ULB என் பெலனும், நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். BSB BSB: So I say, “My strength has perished, along with my hope from the LORD.”
19 ULB எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். BSB BSB: Remember my affliction and wandering, the wormwood and the gall.
20 ULB என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. BSB BSB: Surely my soul remembers and is humbled within me.
21 ULB இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். BSB BSB: Yet I call this to mind, and therefore I have hope:
23 ULB அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. BSB BSB: They are new every morning; great is Your faithfulness!
24 ULB கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். BSB BSB: “The LORD is my portion,” says my soul, “therefore I will hope in Him.”
25 ULB தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். BSB BSB: The LORD is good to those who wait for Him, to the soul who seeks Him.
26 ULB கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. BSB BSB: It is good to wait quietly for the salvation of the LORD.
27 ULB தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது. BSB BSB: It is good for a man to bear the yoke while he is still young.
28 ULB அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருக்கக்கடவன். BSB BSB: Let him sit alone in silence, for the LORD has laid it upon him.
29 ULB நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக. BSB BSB: Let him bury his face in the dust—perhaps there is still hope.
30 ULB தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக. BSB BSB: Let him offer his cheek to the one who would strike him; let him be filled with reproach.
31 ULB ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். BSB BSB: For the Lord will not cast us off forever.
32 ULB அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார். BSB BSB: Even if He causes grief, He will show compassion according to His abundant loving devotion.
33 ULB அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை. BSB BSB: For He does not willingly afflict or grieve the sons of men.
34 ULB ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், BSB BSB: To crush underfoot all the prisoners of the land,
35 ULB உன்னதமானவரின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், BSB BSB: to deny a man justice before the Most High,
36 ULB மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? BSB BSB: to subvert a man in his lawsuit—of these the Lord does not approve.
37 ULB ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? BSB BSB: Who has spoken and it came to pass, unless the Lord has ordained it?
38 ULB உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? BSB BSB: Do not both adversity and good come from the mouth of the Most High?
39 ULB உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? BSB BSB: Why should any mortal man complain, in view of his sins?
40 ULB நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். BSB BSB: Let us examine and test our ways, and turn back to the LORD.
41 ULB நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். BSB BSB: Let us lift up our hearts and hands to God in heaven:
42 ULB நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர். BSB BSB: “We have sinned and rebelled; You have not forgiven.”
43 ULB தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். BSB BSB: You have covered Yourself in anger and pursued us; You have killed without pity.
44 ULB ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். BSB BSB: You have covered Yourself with a cloud that no prayer can pass through.
45 ULB மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். BSB BSB: You have made us scum and refuse among the nations.
46 ULB எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள். BSB BSB: All our enemies open their mouths against us.
47 ULB பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. BSB BSB: Panic and pitfall have come upon us—devastation and destruction.
48 ULB மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து நீர்வடிகிறது. BSB BSB: Streams of tears flow from my eyes over the destruction of the daughter of my people.
49 ULB கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, BSB BSB: My eyes overflow unceasingly, without relief,
50 ULB என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. BSB BSB: until the LORD looks down from heaven and sees.
51 ULB என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது. BSB BSB: My eyes bring grief to my soul because of all the daughters of my city.
52 ULB காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள். BSB BSB: Without cause my enemies hunted me like a bird.
53 ULB படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். BSB BSB: They dropped me alive into a pit and cast stones upon me.
54 ULB தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். BSB BSB: The waters flowed over my head, and I thought I was going to die.
55 ULB மகா ஆழமான குழியிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். BSB BSB: I called on Your name, O LORD, out of the depths of the Pit.
56 ULB என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். BSB BSB: You heard my plea: “Do not ignore my cry for relief.”
57 ULB நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். BSB BSB: You drew near when I called on You; You said, “Do not be afraid.”
58 ULB ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். BSB BSB: You defend my cause, O Lord; You redeem my life.
59 ULB கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். BSB BSB: You have seen, O LORD, the wrong done to me; vindicate my cause!
60 ULB அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். BSB BSB: You have seen all their malice, all their plots against me.
61 ULB கர்த்தாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும், BSB BSB: O LORD, You have heard their insults, all their plots against me—
62 ULB எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். BSB BSB: the slander and murmuring of my assailants against me all day long.
63 ULB அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். BSB BSB: When they sit and when they rise, see how they mock me in song.
64 ULB கர்த்தாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர். BSB BSB: You will pay them back what they deserve, O LORD, according to the work of their hands.
65 ULB அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். BSB BSB: Put a veil of anguish over their hearts; may Your curse be upon them!
66 ULB கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, கர்த்தருடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர். BSB BSB: You will pursue them in anger and exterminate them from under Your heavens, O LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.