1 ULB கர்த்தாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். BSB BSB: Remember, O LORD, what has happened to us. Look and see our disgrace!
2 ULB எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது. BSB BSB: Our inheritance has been turned over to strangers, our houses to foreigners.
3 ULB திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். BSB BSB: We have become fatherless orphans; our mothers are widows.
4 ULB எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது. BSB BSB: We must buy the water we drink; our wood comes at a price.
5 ULB பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை. BSB BSB: We are closely pursued; we are weary and find no rest.
6 ULB உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம். BSB BSB: We submitted to Egypt and Assyria to get enough bread.
7 ULB எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். BSB BSB: Our fathers sinned and are no more, but we bear their punishment.
8 ULB அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை. BSB BSB: Slaves rule over us; there is no one to deliver us from their hands.
9 ULB வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால், எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம். BSB BSB: We get our bread at the risk of our lives because of the sword in the wilderness.
10 ULB பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது. BSB BSB: Our skin is as hot as an oven with fever from our hunger.
11 ULB சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள். BSB BSB: Women have been ravished in Zion, virgins in the cities of Judah.
12 ULB தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை. BSB BSB: Princes have been hung up by their hands; elders receive no respect.
13 ULB வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள். BSB BSB: Young men toil at millstones; boys stagger under loads of wood.
14 ULB முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது. BSB BSB: The elders have left the city gate; the young men have stopped their music.
15 ULB எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது. BSB BSB: Joy has left our hearts; our dancing has turned to mourning.
16 ULB எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவம்செய்தோமே. BSB BSB: The crown has fallen from our head. Woe to us, for we have sinned!
17 ULB அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது; அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின. BSB BSB: Because of this, our hearts are faint; because of these, our eyes grow dim—
18 ULB பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. BSB BSB: because of Mount Zion, which lies desolate, patrolled by foxes.
19 ULB கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். BSB BSB: You, O LORD, reign forever; Your throne endures from generation to generation.
20 ULB தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன? BSB BSB: Why have You forgotten us forever? Why have You forsaken us for so long?
21 ULB கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். BSB BSB: Restore us to Yourself, O LORD, so we may return; renew our days as of old,
22 ULB எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே! BSB BSB: unless You have utterly rejected us and remain angry with us beyond measure.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.