1 ULB கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி: BSB BSB: Then the LORD called to Moses and spoke to him from the Tent of Meeting, saying,
2 ULB நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும். BSB BSB: “Speak to the Israelites and tell them: When any of you brings an offering to the LORD, you may bring as your offering an animal from the herd or the flock.
3 ULB அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில், தான் அங்கிகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து, BSB BSB: If his offering is a burnt offering from the herd, he is to present an unblemished male. He must bring it to the entrance to the Tent of Meeting for its acceptance before the LORD.
4 ULB தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கிகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, BSB BSB: He is to lay his hand on the head of the burnt offering, so it can be accepted on his behalf to make atonement for him.
5 ULB கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். BSB BSB: And he shall slaughter the young bull before the LORD, and Aaron’s sons the priests are to present the blood and splatter it on all sides of the altar at the entrance to the Tent of Meeting.
6 ULB பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டக்கடவன். BSB BSB: Next, he is to skin the burnt offering and cut it into pieces.
7 ULB அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி, BSB BSB: The sons of Aaron the priest shall put a fire on the altar and arrange wood on the fire.
8 ULB அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். BSB BSB: Then Aaron’s sons the priests are to arrange the pieces, including the head and the fat, atop the burning wood on the altar.
9 ULB அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி. BSB BSB: The entrails and legs must be washed with water, and the priest shall burn all of it on the altar as a burnt offering, a food offering, a pleasing aroma to the LORD.
10 ULB அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, BSB BSB: If, however, one’s offering is a burnt offering from the flock—from the sheep or goats—he is to present an unblemished male.
11 ULB கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். BSB BSB: He shall slaughter it on the north side of the altar before the LORD, and Aaron’s sons the priests are to splatter its blood against the altar on all sides.
12 ULB பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன். BSB BSB: He is to cut the animal into pieces, and the priest shall arrange them, including the head and fat, atop the burning wood that is on the altar.
13 ULB குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி. BSB BSB: The entrails and legs must be washed with water, and the priest shall present all of it and burn it on the altar; it is a burnt offering, a food offering, a pleasing aroma to the LORD.
14 ULB அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன். BSB BSB: If, instead, one’s offering to the LORD is a burnt offering of birds, he is to present a turtledove or a young pigeon.
15 ULB அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு, BSB BSB: Then the priest shall bring it to the altar, twist off its head, and burn it on the altar; its blood should be drained out on the side of the altar.
16 ULB அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, BSB BSB: And he is to remove the crop with its contents and throw it to the east side of the altar, in the place for ashes.
17 ULB பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி. BSB BSB: He shall tear it open by its wings, without dividing the bird completely. And the priest is to burn it on the altar atop the burning wood. It is a burnt offering, a food offering, a pleasing aroma to the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.