1 ULB ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: BSB BSB: These are the words of King Lemuel—the burden that his mother taught him:
2 ULB என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே, BSB BSB: What shall I say, O my son? What, O son of my womb? What, O son of my vows?
3 ULB பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. BSB BSB: Do not spend your strength on women or your vigor on those who ruin kings.
4 ULB திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. BSB BSB: It is not for kings, O Lemuel, it is not for kings to drink wine, or for rulers to crave strong drink,
5 ULB மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். BSB BSB: lest they drink and forget what is decreed, depriving all the oppressed of justice.
6 ULB மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; BSB BSB: Give strong drink to one who is perishing, and wine to the bitter in soul.
7 ULB அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். BSB BSB: Let him drink and forget his poverty, and remember his misery no more.
8 ULB ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் உன்னுடைய வாயைத் திற. BSB BSB: Open your mouth for those with no voice, for the cause of all the dispossessed.
9 ULB உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். BSB BSB: Open your mouth, judge righteously, and defend the cause of the poor and needy.
10 ULB குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. BSB BSB: A wife of noble character, who can find? She is far more precious than rubies.
11 ULB அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது. BSB BSB: The heart of her husband trusts in her, and he lacks nothing of value.
12 ULB அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள். BSB BSB: She brings him good and not harm all the days of her life.
13 ULB ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். BSB BSB: She selects wool and flax and works with eager hands.
14 ULB அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். BSB BSB: She is like the merchant ships, bringing her food from afar.
15 ULB இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். BSB BSB: She rises while it is still night to provide food for her household and portions for her maidservants.
16 ULB ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். BSB BSB: She appraises a field and buys it; from her earnings she plants a vineyard.
17 ULB தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். BSB BSB: She girds herself with strength and shows that her arms are strong.
18 ULB தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். BSB BSB: She sees that her gain is good, and her lamp is not extinguished at night.
19 ULB தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். BSB BSB: She stretches out her hands to the distaff and grasps the spindle with her fingers.
20 ULB சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். BSB BSB: She opens her arms to the poor and reaches out her hands to the needy.
21 ULB தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். BSB BSB: When it snows, she has no fear for her household, for they are all clothed in scarlet.
22 ULB இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. BSB BSB: She makes coverings for her bed; her clothing is fine linen and purple.
23 ULB அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான். BSB BSB: Her husband is known at the city gates, where he sits among the elders of the land.
24 ULB மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். BSB BSB: She makes linen garments and sells them; she delivers sashes to the merchants.
25 ULB அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். BSB BSB: Strength and honor are her clothing, and she can laugh at the days to come.
26 ULB தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. BSB BSB: She opens her mouth with wisdom, and faithful instruction is on her tongue.
27 ULB அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். BSB BSB: She watches over the affairs of her household and does not eat the bread of idleness.
28 ULB அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: BSB BSB: Her children rise up and call her blessed; her husband praises her as well:
29 ULB அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். BSB BSB: “Many daughters have done noble things, but you surpass them all!”
30 ULB செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். BSB BSB: Charm is deceptive and beauty is fleeting, but a woman who fears the LORD is to be praised.
31 ULB அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக. BSB BSB: Give her the fruit of her hands, and let her works praise her at the gates.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.