1 ULB என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. BSB BSB: My son, keep my words and treasure my commandments within you.
2 ULB என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். BSB BSB: Keep my commandments and live; guard my teachings as the apple of your eye.
3 ULB அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள். BSB BSB: Tie them to your fingers; write them on the tablet of your heart.
4 ULB ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, BSB BSB: Say to wisdom, “You are my sister,” and call understanding your kinsman,
5 ULB ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. BSB BSB: that they may keep you from the adulteress, from the stranger with seductive words.
6 ULB நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது, BSB BSB: For at the window of my house I looked through the lattice.
7 ULB பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன். BSB BSB: I saw among the simple, I noticed among the youths, a young man lacking judgment,
8 ULB அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், இரவின் இருளிலும். BSB BSB: crossing the street near her corner, strolling down the road to her house,
9 ULB அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான். BSB BSB: at twilight, as the day was fading into the dark of the night.
10 ULB அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். BSB BSB: Then a woman came out to meet him, with the attire of a harlot and cunning of heart.
11 ULB அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை. BSB BSB: She is loud and defiant; her feet do not remain at home.
12 ULB சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், சந்துகள்தோறும் மறைந்திருப்பாள். BSB BSB: Now in the street, now in the squares, she lurks at every corner.
13 ULB அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, முகம் நாணாமல் அவனைப் பார்த்து: BSB BSB: She seizes him and kisses him; she brazenly says to him:
14 ULB சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன். BSB BSB: “I have made my peace offerings; today I have paid my vows.
15 ULB ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். BSB BSB: So I came out to meet you; I sought you, and I have found you.
16 ULB என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன். BSB BSB: I have decked my bed with coverings, with colored linen from Egypt.
17 ULB என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன். BSB BSB: I have perfumed my bed with myrrh, with aloes, and with cinnamon.
18 ULB வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். BSB BSB: Come, let us take our fill of love till morning. Let us delight in loving caresses!
19 ULB கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். BSB BSB: For my husband is not at home; he has gone on a long journey.
20 ULB பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, BSB BSB: He took with him a bag of money and will not return till the moon is full.”
21 ULB தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள். BSB BSB: With her great persuasion she entices him; with her flattering lips she lures him.
22 ULB உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், BSB BSB: He follows her on impulse, like an ox going to the slaughter, like a deer bounding into a trap,
23 ULB ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய ஈரலைப் பிளந்தது. BSB BSB: until an arrow pierces his liver, like a bird darting into a snare—not knowing it will cost him his life.
24 ULB ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். BSB BSB: Now, my sons, listen to me, and attend to the words of my mouth.
25 ULB உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே. BSB BSB: Do not let your heart turn aside to her ways; do not stray into her paths.
26 ULB அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். BSB BSB: For she has brought many down to death; her slain are many in number.
27 ULB அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். BSB BSB: Her house is the road to Sheol, descending to the chambers of death.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.