1 ULB தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். BSB BSB: For the choirmaster. To the tune of “A Dove on Distant Oaks.” A Miktam of David, when the Philistines seized him in Gath. Be merciful to me, O God, for men are hounding me; all day they press their attack.
2 ULB என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். BSB BSB: My enemies pursue me all day long, for many proudly assail me.
3 ULB நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். BSB BSB: When I am afraid, I put my trust in You.
4 ULB தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்? BSB BSB: In God, whose word I praise—in God I trust. I will not be afraid. What can man do to me?
5 ULB எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது. BSB BSB: All day long they twist my words; all their thoughts are on my demise.
6 ULB அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். BSB BSB: They conspire, they lurk, they watch my steps while they wait to take my life.
7 ULB அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும். BSB BSB: In spite of such sin, will they escape? In Your anger, O God, cast down the nations.
8 ULB என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? BSB BSB: You have taken account of my wanderings. Put my tears in Your bottle—are they not in Your book?
9 ULB நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். BSB BSB: Then my enemies will retreat on the day I cry for help. By this I will know that God is on my side.
10 ULB தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். BSB BSB: In God, whose word I praise, in the LORD, whose word I praise,
11 ULB தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்? BSB BSB: in God I trust; I will not be afraid. What can man do to me?
12 ULB தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். BSB BSB: Your vows are upon me, O God; I will render thank offerings to You.
13 ULB நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ? BSB BSB: For You have delivered my soul from death, and my feet from stumbling, that I may walk before God in the light of life.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.