1 ULB கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். BSB BSB: For the choirmaster. To the tune of “The Death of the Son.” A Psalm of David. I will give thanks to the LORD with all my heart; I will recount all Your wonders.
2 ULB உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். BSB BSB: I will be glad and rejoice in You; I will sing praise to Your name, O Most High.
3 ULB என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். BSB BSB: When my enemies retreat, they stumble and perish before You.
4 ULB நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர். BSB BSB: For You have upheld my just cause; You sit on Your throne judging righteously.
5 ULB தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். BSB BSB: You have rebuked the nations; You have destroyed the wicked; You have erased their name forever and ever.
6 ULB எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. BSB BSB: The enemy has come to eternal ruin, and You have uprooted their cities; the very memory of them has vanished.
7 ULB கர்த்தரோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். BSB BSB: But the LORD abides forever; He has established His throne for judgment.
8 ULB அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். BSB BSB: He judges the world with justice; He governs the people with equity.
9 ULB சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். BSB BSB: The LORD is a refuge for the oppressed, a stronghold in times of trouble.
10 ULB கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். BSB BSB: Those who know Your name trust in You, for You, O LORD, have not forsaken those who seek You.
11 ULB சீயோனில் அரசாளுகிற கர்த்தரைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். BSB BSB: Sing praises to the LORD, who dwells in Zion; proclaim His deeds among the nations.
12 ULB ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். BSB BSB: For the Avenger of bloodshed remembers; He does not ignore the cry of the afflicted.
13 ULB மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, BSB BSB: Be merciful to me, O LORD; see how my enemies afflict me! Lift me up from the gates of death,
14 ULB தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். BSB BSB: that I may declare all Your praises—that within the gates of Daughter Zion I may rejoice in Your salvation.
15 ULB தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. BSB BSB: The nations have fallen into a pit of their making; their feet are caught in the net they have hidden.
16 ULB கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) BSB BSB: The LORD is known by the justice He brings; the wicked are ensnared by the work of their hands. Higgaion Selah
17 ULB துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். BSB BSB: The wicked will return to Sheol—all the nations who forget God.
18 ULB எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. BSB BSB: For the needy will not always be forgotten; nor the hope of the oppressed forever dashed.
19 ULB எழுந்தருளும் கர்த்தாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் BSB BSB: Rise up, O LORD, do not let man prevail; let the nations be judged in Your presence.
20 ULB தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா) BSB BSB: Lay terror upon them, O LORD; let the nations know they are but men. Selah
Select verses for actions: Enter goes to them and Escape comes back.