1 ULB நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். BSB BSB: O LORD, God of vengeance, O God of vengeance, shine forth.
2 ULB பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும். BSB BSB: Rise up, O Judge of the earth; render a reward to the proud.
3 ULB கர்த்தாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து, எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்? BSB BSB: How long will the wicked, O LORD, how long will the wicked exult?
4 ULB எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி, கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? BSB BSB: They pour out arrogant words; all workers of iniquity boast.
5 ULB கர்த்தாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். BSB BSB: They crush Your people, O LORD; they oppress Your heritage.
6 ULB விதவையையும் அந்நியனையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: BSB BSB: They kill the widow and the foreigner; they murder the fatherless.
7 ULB கர்த்தர் பார்க்கமாட்டார், யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். BSB BSB: They say, “The LORD does not see; the God of Jacob pays no heed.”
8 ULB மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? BSB BSB: Take notice, O senseless among the people! O fools, when will you be wise?
9 ULB காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ? கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ? BSB BSB: He who affixed the ear, can He not hear? He who formed the eye, can He not see?
10 ULB தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ? மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ? BSB BSB: He who admonishes the nations, does He not discipline? He who teaches man, does He lack knowledge?
11 ULB மனிதனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். BSB BSB: The LORD knows the thoughts of man, that they are futile.
12 ULB கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து, BSB BSB: Blessed is the man You discipline, O LORD, and teach from Your law,
13 ULB தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனிதன் பாக்கியவான். BSB BSB: to grant him relief from days of trouble, until a pit is dug for the wicked.
14 ULB கர்த்தர் தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். BSB BSB: For the LORD will not forsake His people; He will never abandon His heritage.
15 ULB நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள். BSB BSB: Surely judgment will again be righteous, and all the upright in heart will follow it.
16 ULB துன்மார்க்கர்களுக்கு விரோதமாக எனது சார்பாக எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்? BSB BSB: Who will rise up for me against the wicked? Who will stand for me against the workers of iniquity?
17 ULB கர்த்தர் எனக்குத் துணையாக இல்லாவிட்டால், என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும். BSB BSB: Unless the LORD had been my helper, I would soon have dwelt in the abode of silence.
18 ULB என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. BSB BSB: If I say, “My foot is slipping,” Your loving devotion, O LORD, supports me.
19 ULB என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. BSB BSB: When anxiety overwhelms me, Your consolation delights my soul.
20 ULB தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ? BSB BSB: Can a corrupt throne be Your ally—one devising mischief by decree?
21 ULB அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். BSB BSB: They band together against the righteous and condemn the innocent to death.
22 ULB கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார். BSB BSB: But the LORD has been my stronghold, and my God is my rock of refuge.
23 ULB அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களை அழிப்பார். BSB BSB: He will bring upon them their own iniquity and destroy them for their wickedness. The LORD our God will destroy them.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.