1 ULB இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. BSB BSB: “Indeed, my eyes have seen all this; my ears have heard and understood.
2 ULB நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. BSB BSB: What you know, I also know; I am not inferior to you.
3 ULB சர்வவல்லவருடன் நான் பேசினால் நல்லது; தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். BSB BSB: Yet I desire to speak to the Almighty and argue my case before God.
4 ULB நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். BSB BSB: You, however, smear with lies; you are all worthless physicians.
5 ULB நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். BSB BSB: If only you would remain silent; for that would be your wisdom!
6 ULB நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். BSB BSB: Hear now my argument, and listen to the plea of my lips.
7 ULB நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? BSB BSB: Will you speak wickedly on God’s behalf or speak deceitfully for Him?
8 ULB அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? BSB BSB: Would you show Him partiality or argue in His defense?
9 ULB அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? BSB BSB: Would it be well when He examined you? Could you deceive Him as you would deceive a man?
10 ULB நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். BSB BSB: Surely He would rebuke you if you secretly showed partiality.
11 ULB அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? BSB BSB: Would His majesty not terrify you? Would the dread of Him not fall upon you?
12 ULB உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். BSB BSB: Your maxims are proverbs of ashes; your defenses are defenses of clay.
13 ULB நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும். BSB BSB: Be silent, and I will speak. Then let come to me what may.
14 ULB நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்? BSB BSB: Why do I put myself at risk and take my life in my own hands?
15 ULB அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். BSB BSB: Though He slay me, I will hope in Him. I will still defend my ways to His face.
16 ULB அவரே என் பாதுகாப்பு; மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான். BSB BSB: Moreover, this will be my salvation, for no godless man can appear before Him.
17 ULB என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள். BSB BSB: Listen carefully to my words; let my declaration ring in your ears.
18 ULB இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன். BSB BSB: See now, I have prepared my case; I know that I will be vindicated.
19 ULB என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. BSB BSB: Can anyone indict me? If so, I will be silent and die.
20 ULB இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். BSB BSB: Only grant these two things to me, so that I need not hide from You:
21 ULB உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. BSB BSB: Withdraw Your hand from me, and do not let Your terror frighten me.
22 ULB நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும். BSB BSB: Then call me, and I will answer, or let me speak, and You can reply.
23 ULB என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். BSB BSB: How many are my iniquities and sins? Reveal to me my transgression and sin.
24 ULB நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? BSB BSB: Why do You hide Your face and consider me as Your enemy?
25 ULB காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? BSB BSB: Would You frighten a windblown leaf? Would You chase after dry chaff?
26 ULB மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். BSB BSB: For You record bitter accusations against me and bequeath to me the iniquities of my youth.
27 ULB என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர். BSB BSB: You put my feet in the stocks and stand watch over all my paths; You set a limit for the soles of my feet.
28 ULB இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான். BSB BSB: So man wastes away like something rotten, like a moth-eaten garment.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.