1 ULB பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். BSB BSB: “Man, who is born of woman, is short of days and full of trouble.
2 ULB அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். BSB BSB: Like a flower, he comes forth, then withers away; like a fleeting shadow, he does not endure.
3 ULB ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? BSB BSB: Do You open Your eyes to one like this? Will You bring him into judgment before You?
4 ULB அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? ஒருவனுமில்லை. BSB BSB: Who can bring out clean from unclean? No one!
5 ULB அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். BSB BSB: Since his days are determined and the number of his months is with You, and since You have set limits that he cannot exceed,
6 ULB அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். BSB BSB: look away from him and let him rest, so he can enjoy his day as a hired hand.
7 ULB ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; BSB BSB: For there is hope for a tree: If it is cut down, it will sprout again, and its tender shoots will not fail.
8 ULB அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், BSB BSB: If its roots grow old in the ground and its stump dies in the soil,
9 ULB தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். BSB BSB: at the scent of water it will bud and put forth twigs like a sapling.
10 ULB மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? BSB BSB: But a man dies and is laid low; he breathes his last, and where is he?
11 ULB தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, BSB BSB: As water disappears from the sea and a river becomes parched and dry,
12 ULB மனிதன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. BSB BSB: so a man lies down and does not rise. Until the heavens are no more, he will not be awakened or roused from sleep.
13 ULB நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். BSB BSB: If only You would hide me in Sheol and conceal me until Your anger has passed! If only You would appoint a time for me and then remember me!
14 ULB மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். BSB BSB: When a man dies, will he live again? All the days of my hard service I will wait, until my renewal comes.
15 ULB என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு பதில் சொல்லுவேன்; உமது கைகளின் செயல்களின்மேல் விருப்பம் வைப்பீராக. BSB BSB: You will call, and I will answer; You will desire the work of Your hands.
16 ULB இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். BSB BSB: For then You would count my steps, but would not keep track of my sin.
17 ULB என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர். BSB BSB: My transgression would be sealed in a bag, and You would cover over my iniquity.
18 ULB மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். BSB BSB: But as a mountain erodes and crumbles and a rock is dislodged from its place,
19 ULB தண்ணீர் கற்களைக் குடையும்; பெருவெள்ளம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். BSB BSB: as water wears away the stones and torrents wash away the soil, so You destroy a man’s hope.
20 ULB நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர். BSB BSB: You forever overpower him, and he passes on; You change his countenance and send him away.
21 ULB அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான். BSB BSB: If his sons receive honor, he does not know it; if they are brought low, he is unaware.
22 ULB அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு என்றான். BSB BSB: He feels only the pain of his own body and mourns only for himself.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.