1 ULB பின்னும் எலிகூ: BSB BSB: And Elihu continued:
2 ULB நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன். BSB BSB: “Bear with me a little longer, and I will show you that there is more to be said on God’s behalf.
3 ULB நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன். BSB BSB: I get my knowledge from afar, and I will ascribe justice to my Maker.
4 ULB மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். BSB BSB: For truly my words are free of falsehood; one perfect in knowledge is with you.
5 ULB இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். BSB BSB: Indeed, God is mighty, but He despises no one; He is mighty in strength of understanding.
6 ULB அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். BSB BSB: He does not keep the wicked alive, but He grants justice to the afflicted.
7 ULB அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். BSB BSB: He does not take His eyes off the righteous, but He enthrones them with kings and exalts them forever.
8 ULB அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், BSB BSB: And if men are bound with chains, caught in cords of affliction,
9 ULB அவர், அவர்களுடைய செயல்களையும், அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, BSB BSB: then He tells them their deeds and how arrogantly they have transgressed.
10 ULB அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். BSB BSB: He opens their ears to correction and commands that they turn from iniquity.
11 ULB அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள். BSB BSB: If they obey and serve Him, then they end their days in prosperity and their years in happiness.
12 ULB அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள். BSB BSB: But if they do not obey, then they perish by the sword and die without knowledge.
13 ULB மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள். BSB BSB: The godless in heart harbor resentment; even when He binds them, they do not cry for help.
14 ULB அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள். BSB BSB: They die in their youth, among the male shrine prostitutes.
15 ULB சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார். BSB BSB: God rescues the afflicted by their affliction and opens their ears in oppression.
16 ULB அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். BSB BSB: Indeed, He drew you from the jaws of distress to a spacious and broad place, to a table full of richness.
17 ULB ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். BSB BSB: But now you are laden with the judgment due the wicked; judgment and justice have seized you.
18 ULB கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். BSB BSB: Be careful that no one lures you with riches; do not let a large bribe lead you astray.
19 ULB உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. BSB BSB: Can your wealth or all your mighty effort keep you from distress?
20 ULB மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். BSB BSB: Do not long for the night, when people vanish from their homes.
21 ULB பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே. BSB BSB: Be careful not to turn to iniquity, for this you have preferred to affliction.
22 ULB இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்? BSB BSB: Behold, God is exalted in His power. Who is a teacher like Him?
23 ULB அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? BSB BSB: Who has appointed His way for Him, or told Him, ‘You have done wrong’?
24 ULB மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும். BSB BSB: Remember to magnify His work, which men have praised in song.
25 ULB எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது. BSB BSB: All mankind has seen it; men behold it from afar.
26 ULB இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. BSB BSB: Indeed, God is great—beyond our knowledge; the number of His years is unsearchable.
27 ULB அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது. BSB BSB: For He draws up drops of water which distill the rain from the mist,
28 ULB அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது. BSB BSB: which the clouds pour out and shower abundantly on mankind.
29 ULB மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? BSB BSB: Furthermore, who can understand how the clouds spread out, how the thunder roars from His pavilion?
30 ULB இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; சமுத்திரத்தை இருளால் மூடுகிறார். BSB BSB: See how He scatters His lightning around Him and covers the depths of the sea.
31 ULB அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். BSB BSB: For by these He judges the nations and provides food in abundance.
32 ULB அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். BSB BSB: He fills His hands with lightning and commands it to strike its mark.
33 ULB அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும். BSB BSB: The thunder declares His presence; even the cattle regard the rising storm.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.