1 ULB பின்னும் கர்த்தர் யோபுக்கு பதிலாக: BSB BSB: And the LORD said to Job:
2 ULB சர்வவல்லவருடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். BSB BSB: “Will the faultfinder contend with the Almighty? Let him who argues with God give an answer.”
3 ULB அப்பொழுது யோபு கர்த்தருக்கு மறுமொழியாக: BSB BSB: Then Job answered the LORD:
4 ULB இதோ, நான் எளியவன்; நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். BSB BSB: “Behold, I am insignificant. How can I reply to You? I place my hand over my mouth.
5 ULB நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். BSB BSB: I have spoken once, but I have no answer—twice, but I have nothing to add.”
6 ULB அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். BSB BSB: Then the LORD answered Job out of the whirlwind and said:
7 ULB இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு பதில் சொல். BSB BSB: “Now brace yourself like a man; I will question you, and you shall inform Me.
8 ULB நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? BSB BSB: Would you really annul My justice? Would you condemn Me to justify yourself?
9 ULB தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ? BSB BSB: Do you have an arm like God’s? Can you thunder with a voice like His?
10 ULB இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு, BSB BSB: Then adorn yourself with majesty and splendor, and clothe yourself with honor and glory.
11 ULB நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, BSB BSB: Unleash the fury of your wrath; look on every proud man and bring him low.
12 ULB பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியவைத்து, துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு. BSB BSB: Look on every proud man and humble him; trample the wicked where they stand.
13 ULB நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு. BSB BSB: Bury them together in the dust; imprison them in the grave.
14 ULB அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன். BSB BSB: Then I will confess to you that your own right hand can save you.
15 ULB இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். BSB BSB: Look at Behemoth, which I made along with you. He feeds on grass like an ox.
16 ULB இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. BSB BSB: See the strength of his loins and the power in the muscles of his belly.
17 ULB அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. BSB BSB: His tail sways like a cedar; the sinews of his thighs are tightly knit.
18 ULB அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. BSB BSB: His bones are tubes of bronze; his limbs are rods of iron.
19 ULB அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். BSB BSB: He is the foremost of God’s works; only his Maker can draw the sword against him.
20 ULB காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். BSB BSB: The hills yield him their produce, while all the beasts of the field play nearby.
21 ULB அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், சேற்றிலும் படுத்துக்கொள்ளும். BSB BSB: He lies under the lotus plants, hidden among the reeds of the marsh.
22 ULB தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும். BSB BSB: The lotus plants conceal him in their shade; the willows of the brook surround him.
23 ULB இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். BSB BSB: Though the river rages, Behemoth is unafraid; he remains secure, though the Jordan surges to his mouth.
24 ULB அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்? BSB BSB: Can anyone capture him as he looks on, or pierce his nose with a snare?
Select verses for actions: Enter goes to them and Escape comes back.