1 ULB மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் கர்த்தரால் வரும். BSB BSB: The plans of the heart belong to man, but the reply of the tongue is from the LORD.
2 ULB மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். BSB BSB: All a man’s ways are pure in his own eyes, but his motives are weighed out by the LORD.
3 ULB உன்னுடைய செயல்களைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். BSB BSB: Commit your works to the LORD and your plans will be achieved.
4 ULB கர்த்தர் எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். BSB BSB: The LORD has made everything for His purpose—even the wicked for the day of disaster.
5 ULB மனமேட்டிமையுள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். BSB BSB: Everyone who is proud in heart is detestable to the LORD; be assured that he will not go unpunished.
6 ULB கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். BSB BSB: By loving devotion and faithfulness iniquity is atoned for, and by the fear of the LORD one turns aside from evil.
7 ULB ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். BSB BSB: When a man’s ways please the LORD, He makes even the man’s enemies live at peace with him.
8 ULB அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. BSB BSB: Better a little with righteousness than great gain with injustice.
9 ULB மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். BSB BSB: A man’s heart plans his course, but the LORD determines his steps.
10 ULB ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. BSB BSB: A divine verdict is on the lips of a king; his mouth must not betray justice.
11 ULB நியாயமான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். BSB BSB: Honest scales and balances are from the LORD; all the weights in the bag are His concern.
12 ULB அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். BSB BSB: Wicked behavior is detestable for kings, for a throne is established through righteousness.
13 ULB நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். BSB BSB: Righteous lips are a king’s delight, and he who speaks honestly is beloved.
14 ULB ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். BSB BSB: The wrath of a king is a messenger of death, but a wise man will pacify it.
15 ULB ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். BSB BSB: When a king’s face brightens, there is life; his favor is like a rain cloud in spring.
16 ULB பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! BSB BSB: How much better to acquire wisdom than gold! To gain understanding is more desirable than silver.
17 ULB தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். BSB BSB: The highway of the upright leads away from evil; he who guards his way protects his life.
18 ULB அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. BSB BSB: Pride goes before destruction, and a haughty spirit before a fall.
19 ULB அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். BSB BSB: It is better to be lowly in spirit among the humble than to divide the spoil with the proud.
20 ULB விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். BSB BSB: Whoever heeds instruction will find success, and blessed is he who trusts in the LORD.
21 ULB இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். BSB BSB: The wise in heart are called discerning, and pleasant speech promotes instruction.
22 ULB புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. BSB BSB: Understanding is a fountain of life to its possessor, but the discipline of fools is folly.
23 ULB ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். BSB BSB: The heart of the wise man instructs his mouth and adds persuasiveness to his lips.
24 ULB இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும். BSB BSB: Pleasant words are a honeycomb, sweet to the soul and healing to the bones.
25 ULB மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள். BSB BSB: There is a way that seems right to a man, but its end is the way of death.
26 ULB உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். BSB BSB: A worker’s appetite works for him because his hunger drives him onward.
27 ULB வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. BSB BSB: A worthless man digs up evil, and his speech is like a scorching fire.
28 ULB மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். BSB BSB: A perverse man spreads dissension, and a gossip divides close friends.
29 ULB கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். BSB BSB: A violent man entices his neighbor and leads him down a path that is not good.
30 ULB அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். BSB BSB: He who winks his eye devises perversity; he who purses his lips is bent on evil.
31 ULB நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம். BSB BSB: Gray hair is a crown of glory; it is attained along the path of righteousness.
32 ULB பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். BSB BSB: He who is slow to anger is better than a warrior, and he who controls his temper is greater than one who captures a city.
33 ULB சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ கர்த்தரால் வரும். BSB BSB: The lot is cast into the lap, but its every decision is from the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.