1 ULB சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். BSB BSB: A gentle answer turns away wrath, but a harsh word stirs up anger.
2 ULB ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். BSB BSB: The tongue of the wise commends knowledge, but the mouth of the fool spouts folly.
3 ULB கர்த்தரின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. BSB BSB: The eyes of the LORD are in every place, observing the evil and the good.
4 ULB ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். BSB BSB: A soothing tongue is a tree of life, but a perverse tongue crushes the spirit.
5 ULB மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. BSB BSB: A fool rejects his father’s discipline, but whoever heeds correction is prudent.
6 ULB நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. BSB BSB: The house of the righteous has great treasure, but the income of the wicked is trouble.
7 ULB ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. BSB BSB: The lips of the wise spread knowledge, but not so the hearts of fools.
8 ULB துன்மார்க்கர்களுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். BSB BSB: The sacrifice of the wicked is detestable to the LORD, but the prayer of the upright is His delight.
9 ULB துன்மார்க்கர்களுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். BSB BSB: The LORD detests the way of the wicked, but He loves those who pursue righteousness.
10 ULB வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். BSB BSB: Discipline is harsh for him who leaves the path; he who hates correction will die.
11 ULB பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? BSB BSB: Sheol and Abaddon lie open before the LORD—how much more the hearts of men!
12 ULB பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். BSB BSB: A mocker does not love to be reproved, nor will he consult the wise.
13 ULB மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். BSB BSB: A joyful heart makes a cheerful countenance, but sorrow of the heart crushes the spirit.
14 ULB புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். BSB BSB: A discerning heart seeks knowledge, but the mouth of a fool feeds on folly.
15 ULB சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து. BSB BSB: All the days of the oppressed are bad, but a cheerful heart has a continual feast.
16 ULB சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். BSB BSB: Better a little with the fear of the LORD than great treasure with turmoil.
17 ULB பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. BSB BSB: Better a dish of vegetables where there is love than a fattened ox with hatred.
18 ULB கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். BSB BSB: A hot-tempered man stirs up strife, but he who is slow to anger calms dispute.
19 ULB சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை. BSB BSB: The way of the slacker is like a hedge of thorns, but the path of the upright is a highway.
20 ULB ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். BSB BSB: A wise son brings joy to his father, but a foolish man despises his mother.
21 ULB மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். BSB BSB: Folly is joy to one who lacks judgment, but a man of understanding walks a straight path.
22 ULB ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். BSB BSB: Plans fail for lack of counsel, but with many advisers they succeed.
23 ULB மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! BSB BSB: A man takes joy in a fitting reply—and how good is a timely word!
24 ULB கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். BSB BSB: The path of life leads upward for the wise, that he may avoid going down to Sheol.
25 ULB அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். BSB BSB: The LORD tears down the house of the proud, but He protects the boundaries of the widow.
26 ULB துன்மார்க்கர்களுடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். BSB BSB: The LORD detests the thoughts of the wicked, but the words of the pure are pleasant to Him.
27 ULB பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். BSB BSB: He who is greedy for unjust gain brings trouble on his household, but he who hates bribes will live.
28 ULB நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். BSB BSB: The heart of the righteous ponders how to answer, but the mouth of the wicked blurts out evil.
29 ULB துன்மார்க்கர்களுக்குக் கர்த்தர் தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். BSB BSB: The LORD is far from the wicked, but He hears the prayer of the righteous.
30 ULB கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். BSB BSB: The light of the eyes cheers the heart, and good news nourishes the bones.
31 ULB வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும். BSB BSB: He who listens to life-giving reproof will dwell among the wise.
32 ULB புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். BSB BSB: He who ignores discipline despises himself, but whoever heeds correction gains understanding.
33 ULB கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. BSB BSB: The fear of the LORD is the instruction of wisdom, and humility comes before honor.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.