1 ULB புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். BSB BSB: Every wise woman builds her house, but a foolish one tears it down with her own hands.
2 ULB நிதானமாக நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். BSB BSB: He who walks in uprightness fears the LORD, but the one who is devious in his ways despises Him.
3 ULB மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். BSB BSB: The proud speech of a fool brings a rod to his back, but the lips of the wise protect them.
4 ULB எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. BSB BSB: Where there are no oxen, the manger is empty, but an abundant harvest comes through the strength of the ox.
5 ULB மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். BSB BSB: An honest witness does not deceive, but a dishonest witness pours forth lies.
6 ULB பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். BSB BSB: A mocker seeks wisdom and finds none, but knowledge comes easily to the discerning.
7 ULB மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். BSB BSB: Stay away from a foolish man; you will gain no knowledge from his speech.
8 ULB தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். BSB BSB: The wisdom of the prudent is to discern his way, but the folly of fools deceives them.
9 ULB மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. BSB BSB: Fools mock the making of amends, but goodwill is found among the upright.
10 ULB இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். BSB BSB: The heart knows its own bitterness, and no stranger shares in its joy.
11 ULB துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். BSB BSB: The house of the wicked will be destroyed, but the tent of the upright will flourish.
12 ULB மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள். BSB BSB: There is a way that seems right to a man, but its end is the way of death.
13 ULB சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். BSB BSB: Even in laughter the heart may ache, and joy may end in sorrow.
14 ULB பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். BSB BSB: The backslider in heart receives the fill of his own ways, but a good man is rewarded for his ways.
16 ULB ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். BSB BSB: A wise man fears and turns from evil, but a fool is careless and reckless.
17 ULB முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். BSB BSB: A quick-tempered man acts foolishly, and a devious man is hated.
18 ULB பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். BSB BSB: The simple inherit folly, but the prudent are crowned with knowledge.
19 ULB தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. BSB BSB: The evil bow before the good, and the wicked at the gates of the righteous.
20 ULB தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. BSB BSB: The poor man is hated even by his neighbor, but many are those who love the rich.
21 ULB பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். BSB BSB: He who despises his neighbor sins, but blessed is he who shows kindness to the poor.
22 ULB தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. BSB BSB: Do not those who contrive evil go astray? But those who plan goodness find loving devotion and faithfulness.
23 ULB எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். BSB BSB: There is profit in all labor, but mere talk leads only to poverty.
24 ULB ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. BSB BSB: The crown of the wise is their wealth, but the effort of fools is folly.
25 ULB மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். BSB BSB: A truthful witness saves lives, but one who utters lies is deceitful.
26 ULB கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். BSB BSB: He who fears the LORD is secure in confidence, and his children shall have a place of refuge.
27 ULB கர்த்தருக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். BSB BSB: The fear of the LORD is a fountain of life, turning a man from the snares of death.
28 ULB மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு. BSB BSB: A large population is a king’s splendor, but a lack of subjects is a prince’s ruin.
29 ULB நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். BSB BSB: A patient man has great understanding, but a quick-tempered man promotes folly.
30 ULB சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி. BSB BSB: A tranquil heart is life to the body, but envy rots the bones.
31 ULB தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; BSB BSB: Whoever oppresses the poor taunts their Maker, but whoever is kind to the needy honors Him.
32 ULB துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். BSB BSB: The wicked man is thrown down by his own sin, but the righteous man has a refuge even in death.
33 ULB புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். BSB BSB: Wisdom rests in the heart of the discerning; even among fools she is known.
34 ULB நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. BSB BSB: Righteousness exalts a nation, but sin is a disgrace to any people.
35 ULB ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும். BSB BSB: A king delights in a wise servant, but his anger falls on the shameful.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.