1 ULB ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். BSB BSB: A wise son heeds his father’s discipline, but a mocker does not listen to rebuke.
2 ULB மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். BSB BSB: From the fruit of his lips a man enjoys good things, but the desire of the faithless is violence.
3 ULB தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். BSB BSB: He who guards his mouth protects his life, but the one who opens his lips invites his own ruin.
4 ULB சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; BSB BSB: The slacker craves yet has nothing, but the soul of the diligent is fully satisfied.
5 ULB நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். BSB BSB: The righteous hate falsehood, but the wicked bring shame and disgrace.
6 ULB நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். BSB BSB: Righteousness guards the man of integrity, but wickedness undermines the sinner.
7 ULB ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. BSB BSB: One pretends to be rich, but has nothing; another pretends to be poor, yet has great wealth.
8 ULB மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். BSB BSB: Riches may ransom a man’s life, but a poor man hears no threat.
9 ULB நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். BSB BSB: The light of the righteous shines brightly, but the lamp of the wicked is extinguished.
10 ULB அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. BSB BSB: Arrogance leads only to strife, but wisdom is with the well-advised.
11 ULB வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். BSB BSB: Dishonest wealth will dwindle, but what is earned through hard work will be multiplied.
12 ULB நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். BSB BSB: Hope deferred makes the heart sick, but desire fulfilled is a tree of life.
13 ULB திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். BSB BSB: He who despises instruction will pay the penalty, but the one who respects a command will be rewarded.
14 ULB ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். BSB BSB: The teaching of the wise is a fountain of life, turning one from the snares of death.
15 ULB நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. BSB BSB: Good understanding wins favor, but the way of the faithless is difficult.
16 ULB விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். BSB BSB: Every prudent man acts with knowledge, but a fool displays his folly.
17 ULB துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. BSB BSB: A wicked messenger falls into trouble, but a faithful envoy brings healing.
18 ULB புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். BSB BSB: Poverty and shame come to him who ignores discipline, but whoever heeds correction is honored.
19 ULB வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. BSB BSB: Desire fulfilled is sweet to the soul, but turning from evil is detestable to fools.
20 ULB ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். BSB BSB: He who walks with the wise will become wise, but the companion of fools will be destroyed.
21 ULB பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். BSB BSB: Disaster pursues sinners, but prosperity is the reward of the righteous.
22 ULB நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். BSB BSB: A good man leaves an inheritance to his children’s children, but the sinner’s wealth is passed to the righteous.
23 ULB ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. BSB BSB: Abundant food is in the fallow ground of the poor, but without justice it is swept away.
24 ULB பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். BSB BSB: He who spares the rod hates his son, but he who loves him disciplines him diligently.
25 ULB நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும். BSB BSB: A righteous man eats to his heart’s content, but the stomach of the wicked is empty.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.