1 ULB ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். BSB BSB: The king’s heart is a waterway in the hand of the LORD; He directs it where He pleases.
2 ULB மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். BSB BSB: All a man’s ways seem right to him, but the LORD weighs the heart.
3 ULB பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். BSB BSB: To do righteousness and justice is more desirable to the LORD than sacrifice.
4 ULB மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே. BSB BSB: Haughty eyes and a proud heart—the guides of the wicked—are sin.
5 ULB ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். BSB BSB: The plans of the diligent bring plenty, as surely as haste leads to poverty.
6 ULB பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். BSB BSB: Making a fortune by a lying tongue is a vanishing mist, a deadly pursuit.
7 ULB துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள். BSB BSB: The violence of the wicked will sweep them away because they refuse to do what is just.
8 ULB குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன். BSB BSB: The way of a guilty man is crooked, but the conduct of the innocent is upright.
9 ULB சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். BSB BSB: Better to live on a corner of the roof than to share a house with a quarrelsome wife.
10 ULB துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. BSB BSB: The soul of the wicked man craves evil; his neighbor finds no favor in his eyes.
11 ULB பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். BSB BSB: When a mocker is punished, the simple gain wisdom; and when a wise man is instructed, he acquires knowledge.
12 ULB நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். BSB BSB: The Righteous One considers the house of the wicked and brings the wicked to ruin.
13 ULB ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். BSB BSB: Whoever shuts his ears to the cry of the poor, he too shall cry out and receive no answer.
14 ULB இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். BSB BSB: A gift in secret soothes anger, and a covert bribe pacifies great wrath.
15 ULB நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். BSB BSB: Justice executed is a joy to the righteous, but a terror to the workers of iniquity.
16 ULB விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். BSB BSB: The man who strays from the path of understanding will rest in the assembly of the dead.
17 ULB சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. BSB BSB: He who loves pleasure will become poor; the one who loves wine and oil will never be rich.
18 ULB நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். BSB BSB: The wicked become a ransom for the righteous, and the faithless for the upright.
19 ULB சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். BSB BSB: Better to live in the desert than with a contentious and ill-tempered wife.
20 ULB வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். BSB BSB: Precious treasures and oil are in the dwelling of the wise, but a foolish man consumes them.
21 ULB நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். BSB BSB: He who pursues righteousness and loving devotion finds life, righteousness, and honor.
22 ULB பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். BSB BSB: A wise man scales the city of the mighty and pulls down the stronghold in which they trust.
23 ULB தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். BSB BSB: He who guards his mouth and tongue keeps his soul from distress.
24 ULB அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். BSB BSB: Mocker is the name of the proud and arrogant man—of him who acts with excessive pride.
25 ULB சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். BSB BSB: The craving of the slacker kills him because his hands refuse to work.
26 ULB அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். BSB BSB: All day long he covets more, but the righteous give without restraint.
27 ULB துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். BSB BSB: The sacrifice of the wicked is detestable—how much more so when brought with ill intent!
28 ULB பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். BSB BSB: A lying witness will perish, but the man who listens to truth will speak forever.
29 ULB துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான். BSB BSB: A wicked man hardens his face, but the upright man makes his way sure.
30 ULB கர்த்தருக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. BSB BSB: There is no wisdom, no understanding, no counsel that can prevail against the LORD.
31 ULB குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ கர்த்தரால் வரும். BSB BSB: A horse is prepared for the day of battle, but victory is of the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.