1 ULB பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. BSB BSB: Do not envy wicked men or desire their company;
2 ULB அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். BSB BSB: for their hearts devise violence, and their lips declare trouble.
3 ULB வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். BSB BSB: By wisdom a house is built and by understanding it is established;
4 ULB அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். BSB BSB: through knowledge its rooms are filled with every precious and beautiful treasure.
5 ULB ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். BSB BSB: A wise man is strong, and a man of knowledge enhances his strength.
6 ULB நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். BSB BSB: Only with sound guidance should you wage war, and victory lies in a multitude of counselors.
7 ULB மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். BSB BSB: Wisdom is too high for a fool; he does not open his mouth in the meeting place.
8 ULB தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். BSB BSB: He who plots evil will be called a schemer.
9 ULB தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். BSB BSB: A foolish scheme is sin, and a mocker is detestable to men.
10 ULB ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது. BSB BSB: If you faint in the day of distress, how small is your strength!
11 ULB மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி. BSB BSB: Rescue those being led away to death, and restrain those stumbling toward the slaughter.
12 ULB அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? BSB BSB: If you say, “Behold, we did not know about this,” does not He who weighs hearts consider it? Does not the One who guards your life know? Will He not repay a man according to his deeds?
13 ULB என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். BSB BSB: Eat honey, my son, for it is good, and the honeycomb is sweet to your taste.
14 ULB அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. BSB BSB: Know therefore that wisdom is sweet to your soul. If you find it, there is a future for you, and your hope will never be cut off.
15 ULB துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. BSB BSB: Do not lie in wait, O wicked man, near the dwelling of the righteous; do not destroy his resting place.
16 ULB நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். BSB BSB: For though a righteous man may fall seven times, he still gets up; but the wicked stumble in bad times.
17 ULB உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக. BSB BSB: Do not gloat when your enemy falls, and do not let your heart rejoice when he stumbles,
18 ULB கர்த்தர் அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். BSB BSB: or the LORD will see and disapprove, and turn His wrath away from him.
19 ULB பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. BSB BSB: Do not fret over evildoers, and do not be envious of the wicked.
20 ULB துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். BSB BSB: For the evil man has no future; the lamp of the wicked will be extinguished.
21 ULB என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே. BSB BSB: My son, fear the LORD and the king, and do not associate with the rebellious.
22 ULB திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்? BSB BSB: For they will bring sudden destruction. Who knows what ruin they can bring?
23 ULB பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. BSB BSB: These also are sayings of the wise: To show partiality in judgment is not good.
24 ULB துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள். BSB BSB: Whoever tells the guilty, “You are innocent”—peoples will curse him, and nations will denounce him;
25 ULB அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். BSB BSB: but it will go well with those who convict the guilty, and rich blessing will come upon them.
26 ULB செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம். BSB BSB: An honest answer given is like a kiss on the lips.
27 ULB வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு. BSB BSB: Complete your outdoor work and prepare your field; after that, you may build your house.
28 ULB நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. BSB BSB: Do not testify against your neighbor without cause, and do not deceive with your lips.
29 ULB அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. BSB BSB: Do not say, “I will do to him as he has done to me; I will repay the man according to his work.”
30 ULB சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். BSB BSB: I went past the field of a slacker and by the vineyard of a man lacking judgment.
31 ULB இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது. BSB BSB: Thorns had grown up everywhere, thistles had covered the ground, and the stone wall was broken down.
32 ULB அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். BSB BSB: I observed and took it to heart; I looked and received instruction:
33 ULB இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? BSB BSB: A little sleep, a little slumber, a little folding of the hands to rest,
34 ULB உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். BSB BSB: and poverty will come upon you like a robber, and need like a bandit.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.