1 ULB யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: BSB BSB: These are additional proverbs of Solomon, which were copied by the men of Hezekiah king of Judah:
3 ULB வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. BSB BSB: As the heavens are high and the earth is deep, so the hearts of kings cannot be searched.
4 ULB வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். BSB BSB: Remove the dross from the silver, and a vessel for a silversmith will come forth.
5 ULB ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். BSB BSB: Remove the wicked from the king’s presence, and his throne will be established in righteousness.
6 ULB ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. BSB BSB: Do not exalt yourself in the presence of the king, and do not stand in the place of great men;
7 ULB உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. BSB BSB: for it is better to be told, “Come up here!” than to be demoted in the presence of the prince. Even what you have seen with your own eyes,
8 ULB வழக்காடப் பதற்றமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. BSB BSB: do not bring hastily to court. Otherwise, what will you do in the end when your neighbor puts you to shame?
9 ULB நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. BSB BSB: Argue your case with your neighbor without betraying another’s confidence,
10 ULB மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது. BSB BSB: lest he who hears you bring shame upon you, and your infamy never go away.
11 ULB ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம். BSB BSB: A word fitly spoken is like apples of gold in settings of silver.
12 ULB கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். BSB BSB: Like an earring of gold or an ornament of fine gold is a wise man’s rebuke to a listening ear.
13 ULB கோடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். BSB BSB: Like the cold of snow in the time of harvest is a trustworthy messenger to those who send him; he refreshes the soul of his masters.
14 ULB கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். BSB BSB: Like clouds and wind without rain is the man who boasts of gifts never given.
15 ULB நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். BSB BSB: Through patience a ruler can be persuaded, and a gentle tongue can break a bone.
16 ULB தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். BSB BSB: If you find honey, eat just what you need, lest you have too much and vomit it up.
17 ULB உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. BSB BSB: Seldom set foot in your neighbor’s house, lest he grow weary and hate you.
18 ULB பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். BSB BSB: Like a club or sword or sharp arrow is a man who bears false witness against his neighbor.
19 ULB ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். BSB BSB: Like a broken tooth or a foot out of joint is confidence in a faithless man in time of trouble.
20 ULB மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். BSB BSB: Like one who removes a garment on a cold day or vinegar poured on a wound is one who sings songs to a heavy heart.
21 ULB உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. BSB BSB: If your enemy is hungry, give him food to eat, and if he is thirsty, give him water to drink.
22 ULB அதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். BSB BSB: For in so doing, you will heap burning coals on his head, and the LORD will reward you.
23 ULB வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். BSB BSB: As the north wind brings forth rain, so a backbiting tongue brings angry looks.
24 ULB சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். BSB BSB: Better to live on a corner of the roof than to share a house with a quarrelsome wife.
25 ULB தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம். BSB BSB: Like cold water to a weary soul is good news from a distant land.
26 ULB துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். BSB BSB: Like a muddied spring or a polluted well is a righteous man who gives way to the wicked.
27 ULB தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. BSB BSB: It is not good to eat too much honey or to search out one’s own glory.
28 ULB தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான். BSB BSB: Like a city whose walls are broken down is a man who does not control his temper.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.