1 ULB கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. BSB BSB: Like snow in summer and rain at harvest, honor does not befit a fool.
2 ULB அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. BSB BSB: Like a fluttering sparrow or darting swallow, an undeserved curse does not come to rest.
3 ULB குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. BSB BSB: A whip for the horse, a bridle for the donkey, and a rod for the backs of fools!
5 ULB மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். BSB BSB: Answer a fool according to his folly, lest he become wise in his own eyes.
6 ULB மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். BSB BSB: Like cutting off one’s own feet or drinking violence is the sending of a message by the hand of a fool.
7 ULB நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். BSB BSB: Like lame legs hanging limp is a proverb in the mouth of a fool.
8 ULB மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். BSB BSB: Like binding a stone into a sling is the giving of honor to a fool.
9 ULB மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள். BSB BSB: Like a thorn that goes into the hand of a drunkard is a proverb in the mouth of a fool.
10 ULB பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். BSB BSB: Like an archer who wounds at random is he who hires a fool or passerby.
11 ULB நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான். BSB BSB: As a dog returns to its vomit, so a fool repeats his folly.
12 ULB தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். BSB BSB: Do you see a man who is wise in his own eyes? There is more hope for a fool than for him.
13 ULB வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். BSB BSB: The slacker says, “A lion is in the road! A fierce lion roams the public square!”
14 ULB கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். BSB BSB: As a door turns on its hinges, so the slacker turns on his bed.
15 ULB சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். BSB BSB: The slacker buries his hand in the dish; it wearies him to bring it back to his mouth.
16 ULB புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். BSB BSB: The slacker is wiser in his own eyes than seven men who answer discreetly.
17 ULB வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். BSB BSB: Like one who grabs a dog by the ears is a passerby who meddles in a quarrel not his own.
18 ULB கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, BSB BSB: Like a madman shooting firebrands and deadly arrows,
19 ULB அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். BSB BSB: so is the man who deceives his neighbor and says, “I was only joking!”
20 ULB விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். BSB BSB: Without wood, a fire goes out; without gossip, a conflict ceases.
21 ULB கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். BSB BSB: Like charcoal for embers and wood for fire, so is a quarrelsome man for kindling strife.
22 ULB கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். BSB BSB: The words of a gossip are like choice morsels that go down into the inmost being.
23 ULB நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். BSB BSB: Like glaze covering an earthen vessel are burning lips and a wicked heart.
24 ULB பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். BSB BSB: A hateful man disguises himself with his speech, but he lays up deceit in his heart.
25 ULB அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. BSB BSB: When he speaks graciously, do not believe him, for seven abominations fill his heart.
26 ULB பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். BSB BSB: Though his hatred is concealed by deception, his wickedness will be exposed in the assembly.
27 ULB படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். BSB BSB: He who digs a pit will fall into it, and he who rolls a stone will have it roll back on him.
28 ULB பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும். BSB BSB: A lying tongue hates those it crushes, and a flattering mouth causes ruin.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.