1 ULB பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். BSB BSB: Listen, my sons, to a father’s instruction; pay attention and gain understanding.
2 ULB நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். BSB BSB: For I give you sound teaching; do not abandon my directive.
3 ULB நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். BSB BSB: When I was a son to my father, tender and the only child of my mother,
4 ULB அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். BSB BSB: he taught me and said, “Let your heart lay hold of my words; keep my commands and you will live.
5 ULB ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. BSB BSB: Get wisdom, get understanding; do not forget my words or turn from them.
6 ULB அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். BSB BSB: Do not forsake wisdom, and she will preserve you; love her, and she will guard you.
7 ULB ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். BSB BSB: Wisdom is supreme; so acquire wisdom. And whatever you may acquire, gain understanding.
8 ULB நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். BSB BSB: Prize her, and she will exalt you; if you embrace her, she will honor you.
9 ULB அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். BSB BSB: She will set a garland of grace on your head; she will present you with a crown of beauty.”
10 ULB என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். BSB BSB: Listen, my son, and receive my words, and the years of your life will be many.
11 ULB ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். BSB BSB: I will guide you in the way of wisdom; I will lead you on straight paths.
12 ULB நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். BSB BSB: When you walk, your steps will not be impeded; when you run, you will not stumble.
13 ULB புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். BSB BSB: Hold on to instruction; do not let go. Guard it, for it is your life.
14 ULB துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே. BSB BSB: Do not set foot on the path of the wicked or walk in the way of evildoers.
15 ULB அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ. BSB BSB: Avoid it; do not travel on it. Turn from it and pass on by.
16 ULB தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். BSB BSB: For they cannot sleep unless they do evil; they are deprived of slumber until they make someone fall.
17 ULB அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். BSB BSB: For they eat the bread of wickedness and drink the wine of violence.
18 ULB நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். BSB BSB: The path of the righteous is like the first gleam of dawn, shining brighter and brighter until midday.
19 ULB துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். BSB BSB: But the way of the wicked is like the darkest gloom; they do not know what makes them stumble.
20 ULB என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். BSB BSB: My son, pay attention to my words; incline your ear to my sayings.
21 ULB அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். BSB BSB: Do not lose sight of them; keep them within your heart.
22 ULB அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். BSB BSB: For they are life to those who find them, and health to the whole body.
23 ULB எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். BSB BSB: Guard your heart with all diligence, for from it flow springs of life.
24 ULB வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. BSB BSB: Put away deception from your mouth; keep your lips from perverse speech.
25 ULB உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். BSB BSB: Let your eyes look forward; fix your gaze straight ahead.
26 ULB உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். BSB BSB: Make a level path for your feet, and all your ways will be sure.
27 ULB வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு. BSB BSB: Do not swerve to the right or to the left; turn your feet away from evil.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.