1 ULB என் ஆத்துமாவே, கர்த்தரைப் போற்று; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. BSB BSB: Of David. Bless the LORD, O my soul; all that is within me, bless His holy name.
2 ULB என் ஆத்துமாவே, கர்த்தருக்கு நன்றிசொல்; அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. BSB BSB: Bless the LORD, O my soul, and do not forget all His kind deeds—
3 ULB அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, BSB BSB: He who forgives all your iniquities and heals all your diseases,
4 ULB உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, BSB BSB: who redeems your life from the Pit and crowns you with loving devotion and compassion,
5 ULB நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. BSB BSB: who satisfies you with good things, so that your youth is renewed like the eagle’s.
6 ULB ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். BSB BSB: The LORD executes righteousness and justice for all the oppressed.
7 ULB அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். BSB BSB: He made known His ways to Moses, His deeds to the people of Israel.
8 ULB கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். BSB BSB: The LORD is compassionate and gracious, slow to anger, abounding in loving devotion.
9 ULB அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை. BSB BSB: He will not always accuse us, nor harbor His anger forever.
10 ULB அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். BSB BSB: He has not dealt with us according to our sins or repaid us according to our iniquities.
11 ULB பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. BSB BSB: For as high as the heavens are above the earth, so great is His loving devotion for those who fear Him.
12 ULB மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். BSB BSB: As far as the east is from the west, so far has He removed our transgressions from us.
13 ULB தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். BSB BSB: As a father has compassion on his children, so the LORD has compassion on those who fear Him.
14 ULB நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். BSB BSB: For He knows our frame; He is mindful that we are dust.
15 ULB மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான். BSB BSB: As for man, his days are like grass—he blooms like a flower of the field;
16 ULB காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. BSB BSB: when the wind passes over, it vanishes, and its place remembers it no more.
17 ULB கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. BSB BSB: But from everlasting to everlasting the loving devotion of the LORD extends to those who fear Him, and His righteousness to their children’s children—
18 ULB அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. BSB BSB: to those who keep His covenant and remember to obey His precepts.
19 ULB கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது. BSB BSB: The LORD has established His throne in heaven, and His kingdom rules over all.
20 ULB கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள். BSB BSB: Bless the LORD, all His angels mighty in strength who carry out His word, who hearken to the voice of His command.
21 ULB கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, அவரைப் போற்றுங்கள். BSB BSB: Bless the LORD, all His hosts, you servants who do His will.
22 ULB கர்த்தர் ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, அவரைப் போற்றுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரைப் போற்று. BSB BSB: Bless the LORD, all His works in all places of His dominion. Bless the LORD, O my soul!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.