2 ULB அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? BSB BSB: Why should the nations say, “Where is their God?”
3 ULB நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். BSB BSB: Our God is in heaven; He does as He pleases.
5 ULB அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. BSB BSB: They have mouths, but cannot speak; they have eyes, but cannot see;
6 ULB அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. BSB BSB: they have ears, but cannot hear; they have noses, but cannot smell;
7 ULB அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. BSB BSB: they have hands, but cannot feel; they have feet, but cannot walk; they cannot even clear their throats.
8 ULB அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். BSB BSB: Those who make them become like them, as do all who trust in them.
9 ULB இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். BSB BSB: O Israel, trust in the LORD! He is their help and shield.
10 ULB ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். BSB BSB: O house of Aaron, trust in the LORD! He is their help and shield.
11 ULB கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். BSB BSB: You who fear the LORD, trust in the LORD! He is their help and shield.
12 ULB கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். BSB BSB: The LORD is mindful of us; He will bless us. He will bless the house of Israel; He will bless the house of Aaron;
13 ULB கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். BSB BSB: He will bless those who fear the LORD—small and great alike.
14 ULB கர்த்தர் உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். BSB BSB: May the LORD give you increase, both you and your children.
15 ULB வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். BSB BSB: May you be blessed by the LORD, the Maker of heaven and earth.
16 ULB வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். BSB BSB: The highest heavens belong to the LORD, but the earth He has given to mankind.
17 ULB இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதிக்கமாட்டார்கள். BSB BSB: It is not the dead who praise the LORD, nor any who descend into silence.
18 ULB நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா. BSB BSB: But it is we who will bless the LORD, both now and forevermore. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.