1 ULB கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். BSB BSB: Blessed are those whose way is blameless, who walk in the Law of the LORD.
2 ULB அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். BSB BSB: Blessed are those who keep His testimonies and seek Him with all their heart.
3 ULB அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். BSB BSB: They do no iniquity; they walk in His ways.
4 ULB உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர். BSB BSB: You have ordained Your precepts, that we should keep them diligently.
5 ULB உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். BSB BSB: Oh, that my ways were committed to keeping Your statutes!
6 ULB நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. BSB BSB: Then I would not be ashamed when I consider all Your commandments.
7 ULB உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். BSB BSB: I will praise You with an upright heart when I learn Your righteous judgments.
8 ULB உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். BSB BSB: I will keep Your statutes; do not utterly forsake me.
9 ULB வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. BSB BSB: How can a young man keep his way pure? By guarding it according to Your word.
10 ULB என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். BSB BSB: With all my heart I have sought You; do not let me stray from Your commandments.
11 ULB நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். BSB BSB: I have hidden Your word in my heart that I might not sin against You.
12 ULB கர்த்தாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். BSB BSB: Blessed are You, O LORD; teach me Your statutes.
13 ULB உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். BSB BSB: With my lips I proclaim all the judgments of Your mouth.
14 ULB திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். BSB BSB: I rejoice in the way of Your testimonies as much as in all riches.
15 ULB உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். BSB BSB: I will meditate on Your precepts and regard Your ways.
16 ULB உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். BSB BSB: I will delight in Your statutes; I will not forget Your word.
17 ULB உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். BSB BSB: Deal bountifully with Your servant, that I may live and keep Your word.
18 ULB உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும். BSB BSB: Open my eyes that I may see wondrous things from Your law.
19 ULB பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். BSB BSB: I am a stranger on the earth; do not hide Your commandments from me.
20 ULB உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. BSB BSB: My soul is consumed with longing for Your judgments at all times.
21 ULB உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். BSB BSB: You rebuke the arrogant—the cursed who stray from Your commandments.
22 ULB நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். BSB BSB: Remove my scorn and contempt, for I have kept Your testimonies.
23 ULB பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். BSB BSB: Though rulers sit and slander me, Your servant meditates on Your statutes.
24 ULB உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. BSB BSB: Your testimonies are indeed my delight; they are my counselors.
25 ULB என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். BSB BSB: My soul cleaves to the dust; revive me according to Your word.
26 ULB என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். BSB BSB: I recounted my ways, and You answered me; teach me Your statutes.
27 ULB உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். BSB BSB: Make clear to me the way of Your precepts; then I will meditate on Your wonders.
28 ULB துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். BSB BSB: My soul melts with sorrow; strengthen me according to Your word.
29 ULB பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். BSB BSB: Remove me from the path of deceit and graciously grant me Your law.
30 ULB மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். BSB BSB: I have chosen the way of truth; I have set Your ordinances before me.
31 ULB உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். BSB BSB: I cling to Your testimonies, O LORD; let me not be put to shame.
32 ULB நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். BSB BSB: I run in the path of Your commandments, for You will enlarge my heart.
33 ULB கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். BSB BSB: Teach me, O LORD, the way of Your statutes, and I will keep them to the end.
34 ULB எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். BSB BSB: Give me understanding that I may obey Your law, and follow it with all my heart.
35 ULB உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன். BSB BSB: Direct me in the path of Your commandments, for there I find delight.
36 ULB என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும். BSB BSB: Turn my heart to Your testimonies and not to covetous gain.
37 ULB மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். BSB BSB: Turn my eyes away from worthless things; revive me with Your word.
38 ULB உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். BSB BSB: Establish Your word to Your servant, to produce reverence for You.
39 ULB நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். BSB BSB: Turn away the disgrace I dread, for Your judgments are good.
40 ULB இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். BSB BSB: How I long for Your precepts! Revive me in Your righteousness.
41 ULB கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. BSB BSB: May Your loving devotion come to me, O LORD, Your salvation, according to Your promise.
42 ULB அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். BSB BSB: Then I can answer him who taunts, for I trust in Your word.
43 ULB சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். BSB BSB: Never take Your word of truth from my mouth, for I hope in Your judgments.
44 ULB நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். BSB BSB: I will always obey Your law, forever and ever.
45 ULB நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன். BSB BSB: And I will walk in freedom, for I have sought Your precepts.
46 ULB நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். BSB BSB: I will speak of Your testimonies before kings, and I will not be ashamed.
47 ULB நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். BSB BSB: I delight in Your commandments because I love them.
48 ULB நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். BSB BSB: I lift up my hands to Your commandments, which I love, and I meditate on Your statutes.
49 ULB நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். BSB BSB: Remember Your word to Your servant, upon which You have given me hope.
50 ULB அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. BSB BSB: This is my comfort in affliction, that Your promise has given me life.
51 ULB பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. BSB BSB: The arrogant utterly deride me, but I do not turn from Your law.
52 ULB கர்த்தாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். BSB BSB: I remember Your judgments of old, O LORD, and in them I find comfort.
53 ULB உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. BSB BSB: Rage has taken hold of me because of the wicked who reject Your law.
54 ULB நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. BSB BSB: Your statutes are songs to me in the house of my pilgrimage.
55 ULB கர்த்தாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். BSB BSB: In the night, O LORD, I remember Your name, that I may keep Your law.
56 ULB நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது. BSB BSB: This is my practice, for I obey Your precepts.
57 ULB கர்த்தாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். BSB BSB: The LORD is my portion; I have promised to keep Your words.
58 ULB முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும். BSB BSB: I have sought Your face with all my heart; be gracious to me according to Your promise.
59 ULB என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். BSB BSB: I considered my ways and turned my steps to Your testimonies.
60 ULB உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன். BSB BSB: I hurried without hesitating to keep Your commandments.
61 ULB துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. BSB BSB: Though the ropes of the wicked bind me, I do not forget Your law.
62 ULB உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதிஇரவில் எழுந்திருப்பேன். BSB BSB: At midnight I rise to give You thanks for Your righteous judgments.
63 ULB உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். BSB BSB: I am a friend to all who fear You, and to those who keep Your precepts.
64 ULB கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். BSB BSB: The earth is filled with Your loving devotion, O LORD; teach me Your statutes.
65 ULB கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர். BSB BSB: You are good to Your servant, O LORD, according to Your word.
66 ULB உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன். BSB BSB: Teach me good judgment and knowledge, for I believe in Your commandments.
67 ULB நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். BSB BSB: Before I was afflicted, I went astray; but now I keep Your word.
68 ULB தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். BSB BSB: You are good, and You do what is good; teach me Your statutes.
69 ULB பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். BSB BSB: Though the arrogant have smeared me with lies, I keep Your precepts with all my heart.
70 ULB அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன். BSB BSB: Their hearts are callous and insensitive, but I delight in Your law.
71 ULB நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். BSB BSB: It was good for me to be afflicted, that I might learn Your statutes.
72 ULB அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். BSB BSB: The law from Your mouth is more precious to me than thousands of pieces of gold and silver.
73 ULB உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். BSB BSB: Your hands have made me and fashioned me; give me understanding to learn Your commandments.
74 ULB நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். BSB BSB: May those who fear You see me and rejoice, for I have hoped in Your word.
75 ULB கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். BSB BSB: I know, O LORD, that Your judgments are righteous, and that in faithfulness You have afflicted me.
76 ULB நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும். BSB BSB: May Your loving devotion comfort me, I pray, according to Your promise to Your servant.
77 ULB நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. BSB BSB: May Your compassion come to me, that I may live, for Your law is my delight.
78 ULB பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். BSB BSB: May the arrogant be put to shame for subverting me with a lie; I will meditate on Your precepts.
79 ULB உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். BSB BSB: May those who fear You turn to me, those who know Your testimonies.
80 ULB நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். BSB BSB: May my heart be blameless in Your statutes, that I may not be put to shame.
81 ULB உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். BSB BSB: My soul faints for Your salvation; I wait for Your word.
82 ULB எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. BSB BSB: My eyes fail, looking for Your promise; I ask, “When will You comfort me?”
83 ULB புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். BSB BSB: Though I am like a wineskin dried up by smoke, I do not forget Your statutes.
84 ULB உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? BSB BSB: How many days must Your servant wait? When will You execute judgment on my persecutors?
85 ULB உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். BSB BSB: The arrogant have dug pits for me in violation of Your law.
86 ULB உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும். BSB BSB: All Your commandments are faithful; I am persecuted without cause—help me!
87 ULB அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. BSB BSB: They almost wiped me from the earth, but I have not forsaken Your precepts.
88 ULB உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். BSB BSB: Revive me according to Your loving devotion, that I may obey the testimony of Your mouth.
89 ULB கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. BSB BSB: Your word, O LORD, is everlasting; it is firmly fixed in the heavens.
90 ULB உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. BSB BSB: Your faithfulness continues through all generations; You established the earth, and it endures.
91 ULB உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும். BSB BSB: Your ordinances stand to this day, for all things are servants to You.
92 ULB உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். BSB BSB: If Your law had not been my delight, then I would have perished in my affliction.
93 ULB நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். BSB BSB: I will never forget Your precepts, for by them You have revived me.
94 ULB நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். BSB BSB: I am Yours; save me, for I have sought Your precepts.
95 ULB துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். BSB BSB: The wicked wait to destroy me, but I will ponder Your testimonies.
96 ULB நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. BSB BSB: I have seen a limit to all perfection, but Your commandment is without limit.
97 ULB உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். BSB BSB: Oh, how I love Your law! All day long it is my meditation.
98 ULB நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. BSB BSB: Your commandments make me wiser than my enemies, for they are always with me.
99 ULB உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். BSB BSB: I have more insight than all my teachers, for Your testimonies are my meditation.
100 ULB உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். BSB BSB: I discern more than the elders, for I obey Your precepts.
101 ULB உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். BSB BSB: I have kept my feet from every evil path, that I may keep Your word.
102 ULB நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். BSB BSB: I have not departed from Your ordinances, for You Yourself have taught me.
103 ULB உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும். BSB BSB: How sweet are Your words to my taste—sweeter than honey in my mouth!
104 ULB உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். BSB BSB: I gain understanding from Your precepts; therefore I hate every false way.
105 ULB உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. BSB BSB: Your word is a lamp to my feet and a light to my path.
106 ULB உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். BSB BSB: I have sworn and confirmed that I will keep Your righteous judgments.
107 ULB நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். BSB BSB: I am severely afflicted, O LORD; revive me through Your word.
108 ULB கர்த்தாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். BSB BSB: Accept the freewill offerings of my mouth, O LORD, and teach me Your judgments.
109 ULB என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். BSB BSB: I constantly take my life in my hands, yet I do not forget Your law.
110 ULB துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். BSB BSB: The wicked have set a snare for me, but I have not strayed from Your precepts.
111 ULB உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. BSB BSB: Your testimonies are my heritage forever, for they are the joy of my heart.
112 ULB முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். BSB BSB: I have inclined my heart to perform Your statutes, even to the very end.
113 ULB வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். BSB BSB: The double-minded I despise, but Your law I love.
114 ULB என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். BSB BSB: You are my hiding place and my shield; I put my hope in Your word.
115 ULB பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். BSB BSB: Depart from me, you evildoers, that I may obey the commandments of my God.
116 ULB நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். BSB BSB: Sustain me as You promised, that I may live; let me not be ashamed of my hope.
117 ULB என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். BSB BSB: Uphold me, and I will be saved, that I may always regard Your statutes.
118 ULB உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. BSB BSB: You reject all who stray from Your statutes, for their deceitfulness is in vain.
119 ULB பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். BSB BSB: All the wicked on earth You discard like dross; therefore I love Your testimonies.
120 ULB உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். BSB BSB: My flesh trembles in awe of You; I stand in fear of Your judgments.
121 ULB நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். BSB BSB: I have done what is just and right; do not leave me to my oppressors.
122 ULB உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். BSB BSB: Ensure Your servant’s well-being; do not let the arrogant oppress me.
123 ULB உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. BSB BSB: My eyes fail, looking for Your salvation, and for Your righteous promise.
124 ULB உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். BSB BSB: Deal with Your servant according to Your loving devotion, and teach me Your statutes.
125 ULB நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். BSB BSB: I am Your servant; give me understanding, that I may know Your testimonies.
126 ULB நீதியைச்செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். BSB BSB: It is time for the LORD to act, for they have broken Your law.
127 ULB ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். BSB BSB: Therefore I love Your commandments more than gold, even the purest gold.
128 ULB எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். BSB BSB: Therefore I admire all Your precepts and hate every false way.
129 ULB உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். BSB BSB: Wonderful are Your testimonies; therefore I obey them.
130 ULB உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். BSB BSB: The unfolding of Your words gives light; it informs the simple.
131 ULB உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். BSB BSB: I open my mouth and pant, longing for Your commandments.
132 ULB உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். BSB BSB: Turn to me and show me mercy, as You do to those who love Your name.
133 ULB உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும். BSB BSB: Order my steps in Your word; let no sin rule over me.
134 ULB மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். BSB BSB: Redeem me from the oppression of man, that I may keep Your precepts.
135 ULB உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். BSB BSB: Make Your face shine upon Your servant, and teach me Your statutes.
136 ULB உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. BSB BSB: My eyes shed streams of tears because Your law is not obeyed.
137 ULB கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். BSB BSB: Righteous are You, O LORD, and upright are Your judgments.
138 ULB நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். BSB BSB: The testimonies You have laid down are righteous and altogether faithful.
139 ULB என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது. BSB BSB: My zeal has consumed me because my foes forget Your words.
140 ULB உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். BSB BSB: Your promise is completely pure; therefore Your servant loves it.
141 ULB நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். BSB BSB: I am lowly and despised, but I do not forget Your precepts.
142 ULB உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். BSB BSB: Your righteousness is everlasting and Your law is true.
143 ULB துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி. BSB BSB: Trouble and distress have found me, but Your commandments are my delight.
144 ULB உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். BSB BSB: Your testimonies are righteous forever. Give me understanding, that I may live.
145 ULB முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். BSB BSB: I call with all my heart; answer me, O LORD! I will obey Your statutes.
146 ULB உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். BSB BSB: I call to You; save me, that I may keep Your testimonies.
147 ULB அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். BSB BSB: I rise before dawn and cry for help; in Your word I have put my hope.
148 ULB உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும். BSB BSB: My eyes anticipate the watches of night, that I may meditate on Your word.
149 ULB உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். BSB BSB: Hear my voice, O LORD, according to Your loving devotion; give me life according to Your justice.
150 ULB தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள். BSB BSB: Those who follow after wickedness draw near; they are far from Your law.
151 ULB கர்த்தாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. BSB BSB: You are near, O LORD, and all Your commandments are true.
152 ULB நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். BSB BSB: Long ago I learned from Your testimonies that You have established them forever.
153 ULB என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன். BSB BSB: Look upon my affliction and rescue me, for I have not forgotten Your law.
154 ULB எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். BSB BSB: Defend my cause and redeem me; revive me according to Your word.
155 ULB இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள். BSB BSB: Salvation is far from the wicked because they do not seek Your statutes.
156 ULB கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். BSB BSB: Great are Your mercies, O LORD; revive me according to Your ordinances.
157 ULB என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன். BSB BSB: Though my persecutors and foes are many, I have not turned from Your testimonies.
158 ULB உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது. BSB BSB: I look on the faithless with loathing because they do not keep Your word.
159 ULB இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். BSB BSB: Consider how I love Your precepts, O LORD; give me life according to Your loving devotion.
160 ULB உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். BSB BSB: The entirety of Your word is truth, and all Your righteous judgments endure forever.
161 ULB பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. BSB BSB: Rulers persecute me without cause, but my heart fears only Your word.
162 ULB மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். BSB BSB: I rejoice in Your promise like one who finds great spoil.
163 ULB பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். BSB BSB: I hate and abhor falsehood, but Your law I love.
164 ULB உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். BSB BSB: Seven times a day I praise You for Your righteous judgments.
165 ULB உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை. BSB BSB: Abundant peace belongs to those who love Your law; nothing can make them stumble.
166 ULB கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். BSB BSB: I wait for Your salvation, O LORD, and I carry out Your commandments.
167 ULB என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். BSB BSB: I obey Your testimonies and love them greatly.
168 ULB உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. BSB BSB: I obey Your precepts and Your testimonies, for all my ways are before You.
169 ULB கர்த்தாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். BSB BSB: May my cry come before You, O LORD; give me understanding according to Your word.
170 ULB என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். BSB BSB: May my plea come before You; rescue me according to Your promise.
171 ULB உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும். BSB BSB: My lips pour forth praise, for You teach me Your statutes.
172 ULB உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். BSB BSB: My tongue sings of Your word, for all Your commandments are righteous.
173 ULB நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும். BSB BSB: May Your hand be ready to help me, for I have chosen Your precepts.
174 ULB கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. BSB BSB: I long for Your salvation, O LORD, and Your law is my delight.
175 ULB என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். BSB BSB: Let me live to praise You; may Your judgments sustain me.
176 ULB காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன். BSB BSB: I have strayed like a lost sheep; seek Your servant, for I have not forgotten Your commandments.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.