1 ULB அல்லேலூயா, கர்த்தருடைய பெயரைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரர்களே, துதியுங்கள். BSB BSB: Hallelujah! Praise the name of the LORD. Give praise, O servants of the LORD,
2 ULB கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். BSB BSB: who stand in the house of the LORD, in the courts of the house of our God.
3 ULB கர்த்தர் நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது. BSB BSB: Hallelujah, for the LORD is good; sing praises to His name, for it is lovely.
4 ULB கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். BSB BSB: For the LORD has chosen Jacob as His own, Israel as His treasured possession.
5 ULB கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். BSB BSB: For I know that the LORD is great; our Lord is above all gods.
6 ULB வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். BSB BSB: The LORD does all that pleases Him in the heavens and on the earth, in the seas and in all their depths.
7 ULB அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். BSB BSB: He causes the clouds to rise from the ends of the earth. He generates the lightning with the rain and brings forth the wind from His storehouses.
8 ULB அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். BSB BSB: He struck down the firstborn of Egypt, of both man and beast.
9 ULB எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். BSB BSB: He sent signs and wonders into your midst, O Egypt, against Pharaoh and all his servants.
10 ULB அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; BSB BSB: He struck down many nations and slaughtered mighty kings:
11 ULB எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து, BSB BSB: Sihon king of the Amorites, Og king of Bashan, and all the kings of Canaan.
12 ULB அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். BSB BSB: He gave their land as an inheritance, as a heritage to His people Israel.
13 ULB கர்த்தாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். BSB BSB: Your name, O LORD, endures forever, Your renown, O LORD, through all generations.
14 ULB கர்த்தர் தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். BSB BSB: For the LORD will vindicate His people and will have compassion on His servants.
15 ULB அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. BSB BSB: The idols of the nations are silver and gold, made by the hands of men.
16 ULB அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. BSB BSB: They have mouths, but cannot speak; they have eyes, but cannot see;
17 ULB அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. BSB BSB: they have ears, but cannot hear; nor is there breath in their mouths.
18 ULB அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். BSB BSB: Those who make them become like them, as do all who trust in them.
19 ULB இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள். BSB BSB: O house of Israel, bless the LORD; O house of Aaron, bless the LORD;
20 ULB லேவி குடும்பத்தாரே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தருக்கு நன்றிசொல்லுங்கள். BSB BSB: O house of Levi, bless the LORD; you who fear the LORD, bless the LORD!
21 ULB எருசலேமில் குடியிருக்கிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா. BSB BSB: Blessed be the LORD from Zion—He who dwells in Jerusalem. Hallelujah!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.