1 ULB கர்த்தாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். BSB BSB: Of David. To You, O LORD, I lift up my soul;
2 ULB என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். BSB BSB: in You, my God, I trust. Do not let me be put to shame; do not let my enemies exult over me.
3 ULB உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. BSB BSB: Surely none who wait for You will be put to shame; but those who engage in treachery without cause will be disgraced.
4 ULB கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். BSB BSB: Show me Your ways, O LORD; teach me Your paths.
5 ULB உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். BSB BSB: Guide me in Your truth and teach me, for You are the God of my salvation; all day long I wait for You.
6 ULB கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. BSB BSB: Remember, O LORD, Your compassion and loving devotion, for they are from age to age.
7 ULB என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். BSB BSB: Remember not the sins of my youth, nor my rebellious acts; remember me according to Your loving devotion, because of Your goodness, O LORD.
8 ULB கர்த்தர் நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். BSB BSB: Good and upright is the LORD; therefore He shows sinners the way.
9 ULB சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். BSB BSB: He guides the humble in what is right and teaches them His way.
10 ULB கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. BSB BSB: All the LORD’s ways are loving and faithful to those who keep His covenant and His decrees.
11 ULB கர்த்தாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். BSB BSB: For the sake of Your name, O LORD, forgive my iniquity, for it is great.
12 ULB கர்த்தருக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். BSB BSB: Who is the man who fears the LORD? He will instruct him in the path chosen for him.
13 ULB அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். BSB BSB: His soul will dwell in prosperity, and his descendants will inherit the land.
14 ULB கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். BSB BSB: The LORD confides in those who fear Him, and reveals His covenant to them.
15 ULB என்னுடைய கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். BSB BSB: My eyes are always on the LORD, for He will free my feet from the mesh.
16 ULB என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். BSB BSB: Turn to me and be gracious, for I am lonely and afflicted.
17 ULB என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். BSB BSB: The troubles of my heart increase; free me from my distress.
18 ULB என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். BSB BSB: Consider my affliction and trouble, and take away all my sins.
19 ULB என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். BSB BSB: Consider my enemies, for they are many, and they hate me with vicious hatred.
20 ULB என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். BSB BSB: Guard my soul and deliver me; let me not be put to shame, for I take refuge in You.
21 ULB உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன். BSB BSB: May integrity and uprightness preserve me, because I wait for You.
22 ULB தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும். BSB BSB: Redeem Israel, O God, from all its distress.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.