1 ULB கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். BSB BSB: A Psalm of David, for remembrance. O LORD, do not rebuke me in Your anger or discipline me in Your wrath.
2 ULB உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது. BSB BSB: For Your arrows have pierced me deeply, and Your hand has pressed down on me.
3 ULB உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. BSB BSB: There is no soundness in my body because of Your anger; there is no rest in my bones because of my sin.
4 ULB என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. BSB BSB: For my iniquities have overwhelmed me; they are a burden too heavy to bear.
5 ULB என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. BSB BSB: My wounds are foul and festering because of my sinful folly.
6 ULB நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். BSB BSB: I am bent and brought low; all day long I go about mourning.
7 ULB என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை. BSB BSB: For my loins are full of burning pain, and no soundness remains in my body.
8 ULB நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். BSB BSB: I am numb and badly crushed; I groan in anguish of heart.
9 ULB ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை. BSB BSB: O Lord, my every desire is before You; my groaning is not hidden from You.
10 ULB என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. BSB BSB: My heart pounds, my strength fails, and even the light of my eyes has faded.
11 ULB என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். BSB BSB: My beloved and friends shun my disease, and my kinsmen stand at a distance.
12 ULB என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். BSB BSB: Those who seek my life lay snares; those who wish me harm speak destruction, plotting deceit all day long.
13 ULB நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். BSB BSB: But like a deaf man, I do not hear; and like a mute man, I do not open my mouth.
14 ULB காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். BSB BSB: I am like a man who cannot hear, whose mouth offers no reply.
15 ULB கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். BSB BSB: I wait for You, O LORD; You will answer, O Lord my God.
16 ULB அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. BSB BSB: For I said, “Let them not gloat over me—those who taunt me when my foot slips.”
17 ULB நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. BSB BSB: For I am ready to fall, and my pain is ever with me.
18 ULB என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். BSB BSB: Yes, I confess my iniquity; I am troubled by my sin.
19 ULB என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். BSB BSB: Many are my enemies without cause, and many hate me without reason.
20 ULB நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். BSB BSB: Those who repay my good with evil attack me for pursuing the good.
21 ULB கர்த்தாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். BSB BSB: Do not forsake me, O LORD; be not far from me, O my God.
22 ULB என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும். BSB BSB: Come quickly to help me, O Lord my Savior.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.