1 ULB என் தேவனாகிய கர்த்தாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். BSB BSB: A Shiggaion of David, which he sang to the LORD concerning the words of Cush, a Benjamite. O LORD my God, I take refuge in You; save me and deliver me from all my pursuers,
2 ULB எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். BSB BSB: or they will shred my soul like a lion and tear me to pieces with no one to rescue me.
3 ULB என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், BSB BSB: O LORD my God, if I have done this, if injustice is on my hands,
4 ULB என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், BSB BSB: if I have rewarded my ally with evil, if I have plundered my foe without cause,
5 ULB எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) BSB BSB: then may my enemy pursue me and overtake me; may he trample me to the ground and leave my honor in the dust. Selah
6 ULB கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. BSB BSB: Arise, O LORD, in Your anger; rise up against the fury of my enemies. Awake, my God, and ordain judgment.
7 ULB மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். BSB BSB: Let the assembled peoples gather around You; take Your seat over them on high.
8 ULB கர்த்தர் மக்களுக்கு நியாயம் செய்வார்; கர்த்தாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும். BSB BSB: The LORD judges the peoples; vindicate me, O LORD, according to my righteousness and integrity.
9 ULB துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். BSB BSB: Put an end to the evil of the wicked, but establish the righteous, O righteous God who searches hearts and minds.
10 ULB செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. BSB BSB: My shield is with God, who saves the upright in heart.
11 ULB தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன். BSB BSB: God is a righteous judge and a God who feels indignation each day.
12 ULB அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். BSB BSB: If one does not repent, God will sharpen His sword; He has bent and strung His bow.
13 ULB அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். BSB BSB: He has prepared His deadly weapons; He ordains His arrows with fire.
14 ULB இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். BSB BSB: Behold, the wicked man travails with evil; he conceives trouble and births falsehood.
15 ULB குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். BSB BSB: He has dug a hole and hollowed it out; he has fallen into a pit of his own making.
16 ULB அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். BSB BSB: His trouble recoils on himself, and his violence falls on his own head.
17 ULB நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன். BSB BSB: I will thank the LORD for His righteousness and sing praise to the name of the LORD Most High.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.