1 ULB என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். BSB BSB: A song. A Psalm of the sons of Korah. For the choirmaster. According to Mahalath Leannoth. A Maskil of Heman the Ezrahite. O LORD, the God of my salvation, day and night I cry out before You.
2 ULB என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். BSB BSB: May my prayer come before You; incline Your ear to my cry.
3 ULB என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. BSB BSB: For my soul is full of troubles, and my life draws near to Sheol.
4 ULB நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, பெலனற்ற மனிதனைப்போல ஆனேன். BSB BSB: I am counted among those descending to the Pit. I am like a man without strength.
5 ULB மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். BSB BSB: I am forsaken among the dead, like the slain who lie in the grave, whom You remember no more, who are cut off from Your care.
6 ULB என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். BSB BSB: You have laid me in the lowest Pit, in the darkest of the depths.
7 ULB உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா) BSB BSB: Your wrath weighs heavily upon me; all Your waves have submerged me. Selah
8 ULB எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன். BSB BSB: You have removed my friends from me; You have made me repulsive to them; I am confined and cannot escape.
9 ULB துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன். BSB BSB: My eyes grow dim with grief. I call to You daily, O LORD; I spread out my hands to You.
10 ULB இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா) BSB BSB: Do You work wonders for the dead? Do departed spirits rise up to praise You? Selah
11 ULB கல்லறைக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? BSB BSB: Can Your loving devotion be proclaimed in the grave, Your faithfulness in Abaddon?
12 ULB இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ? BSB BSB: Will Your wonders be known in the darkness, or Your righteousness in the land of oblivion?
13 ULB நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். BSB BSB: But to You, O LORD, I cry for help; in the morning my prayer comes before You.
14 ULB கர்த்தாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? BSB BSB: Why, O LORD, do You reject me? Why do You hide Your face from me?
15 ULB சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன். BSB BSB: From my youth I was afflicted and near death. I have borne Your terrors; I am in despair.
16 ULB உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது. BSB BSB: Your wrath has swept over me; Your terrors have destroyed me.
17 ULB அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது. BSB BSB: All day long they engulf me like water; they enclose me on every side.
18 ULB நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள். BSB BSB: You have removed my beloved and my friend; darkness is my closest companion.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.