1 ULB கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். BSB BSB: A Maskil of Ethan the Ezrahite. I will sing of the loving devotion of the LORD forever; with my mouth I will proclaim Your faithfulness to all generations.
2 ULB கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன். BSB BSB: For I have said, “Loving devotion is built up forever; in the heavens You establish Your faithfulness.”
3 ULB என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி: BSB BSB: You said, “I have made a covenant with My chosen one, I have sworn to David My servant:
4 ULB என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) BSB BSB: ‘I will establish your offspring forever and build up your throne for all generations.’” Selah
5 ULB கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். BSB BSB: The heavens praise Your wonders, O LORD—Your faithfulness as well—in the assembly of the holy ones.
6 ULB வானத்தில் கர்த்தருக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? BSB BSB: For who in the skies can compare with the LORD? Who among the heavenly beings is like the LORD?
7 ULB தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். BSB BSB: In the council of the holy ones, God is greatly feared, and awesome above all who surround Him.
8 ULB சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. BSB BSB: O LORD God of Hosts, who is like You? O mighty LORD, Your faithfulness surrounds You.
9 ULB தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர். BSB BSB: You rule the raging sea; when its waves mount up, You still them.
10 ULB நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர். BSB BSB: You crushed Rahab like a carcass; You scattered Your enemies with Your mighty arm.
11 ULB வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். BSB BSB: The heavens are Yours, and also the earth. The earth and its fullness You founded.
12 ULB வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். BSB BSB: North and south You created; Tabor and Hermon shout for joy at Your name.
13 ULB உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகை உன்னதமானது. BSB BSB: Mighty is Your arm; strong is Your hand. Your right hand is exalted.
14 ULB நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். BSB BSB: Righteousness and justice are the foundation of Your throne; loving devotion and faithfulness go before You.
15 ULB கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். BSB BSB: Blessed are those who know the joyful sound, who walk, O LORD, in the light of Your presence.
16 ULB அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். BSB BSB: They rejoice in Your name all day long, and in Your righteousness they exult.
17 ULB நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும். BSB BSB: For You are the glory of their strength, and by Your favor our horn is exalted.
18 ULB கர்த்தரால் எங்களுடைய கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. BSB BSB: Surely our shield belongs to the LORD, and our king to the Holy One of Israel.
19 ULB அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். BSB BSB: You once spoke in a vision; to Your godly ones You said, “I have bestowed help on a warrior; I have exalted one chosen from the people.
20 ULB என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன். BSB BSB: I have found My servant David; with My sacred oil I have anointed him.
21 ULB என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும். BSB BSB: My hand will sustain him; surely My arm will strengthen him.
22 ULB எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை. BSB BSB: No enemy will exact tribute; no wicked man will oppress him.
23 ULB அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். BSB BSB: I will crush his foes before him and strike down those who hate him.
24 ULB என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும். BSB BSB: My faithfulness and loving devotion will be with him, and through My name his horn will be exalted.
25 ULB அவனுடைய கையை கடலின்மேலும், அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். BSB BSB: I will set his hand over the sea, and his right hand upon the rivers.
26 ULB அவன் என்னை நோக்கி: நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். BSB BSB: He will call to Me, ‘You are my Father, my God, the Rock of my salvation.’
27 ULB நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன். BSB BSB: I will indeed appoint him as My firstborn, the highest of the kings of the earth.
28 ULB என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். BSB BSB: I will forever preserve My loving devotion for him, and My covenant with him will stand fast.
29 ULB அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன். BSB BSB: I will establish his line forever, his throne as long as the heavens endure.
30 ULB அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், என்னுடைய வேதத்தை விட்டு விலகி; BSB BSB: If his sons forsake My law and do not walk in My judgments,
31 ULB என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்; BSB BSB: if they violate My statutes and fail to keep My commandments,
32 ULB அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். BSB BSB: I will attend to their transgression with the rod, and to their iniquity with stripes.
33 ULB ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன். BSB BSB: But I will not withdraw My loving devotion from him, nor ever betray My faithfulness.
34 ULB என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன். BSB BSB: I will not violate My covenant or alter the utterance of My lips.
35 ULB ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன். BSB BSB: Once and for all I have sworn by My holiness—I will not lie to David—
36 ULB அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். BSB BSB: his offspring shall endure forever, and his throne before Me like the sun,
37 ULB சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா) BSB BSB: like the moon, established forever, a faithful witness in the sky.” Selah
38 ULB ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர். BSB BSB: Now, however, You have spurned and rejected him; You are enraged by Your anointed one.
39 ULB உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். BSB BSB: You have renounced the covenant with Your servant and sullied his crown in the dust.
40 ULB அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர். BSB BSB: You have broken down all his walls; You have reduced his strongholds to rubble.
41 ULB வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான். BSB BSB: All who pass by plunder him; he has become a reproach to his neighbors.
42 ULB அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். BSB BSB: You have exalted the right hand of his foes; You have made all his enemies rejoice.
43 ULB அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். BSB BSB: You have bent the edge of his sword and have not sustained him in battle.
44 ULB அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். BSB BSB: You have ended his splendor and cast his throne to the ground.
45 ULB அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா) BSB BSB: You have cut short the days of his youth; You have covered him with shame. Selah
46 ULB எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? BSB BSB: How long, O LORD? Will You hide Yourself forever? Will Your wrath keep burning like fire?
47 ULB என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன? BSB BSB: Remember the briefness of my lifespan! For what futility You have created all men!
48 ULB மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) BSB BSB: What man can live and never see death? Can he deliver his soul from the power of Sheol? Selah
49 ULB ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே? BSB BSB: Where, O Lord, is Your loving devotion of old, which You faithfully swore to David?
50 ULB ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், BSB BSB: Remember, O Lord, the reproach of Your servants, which I bear in my heart from so many people—
51 ULB கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும். BSB BSB: how Your enemies have taunted, O LORD, and have mocked every step of Your anointed one!
52 ULB கர்த்தருக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். ஆமென். ஆமென். BSB BSB: Blessed be the LORD forever! Amen and amen.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.