3 ULB நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். BSB BSB: You return man to dust, saying, “Return, O sons of mortals.”
4 ULB உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது. BSB BSB: For in Your sight a thousand years are but a day that passes, or a watch of the night.
5 ULB அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். BSB BSB: You sweep them away in their sleep; they are like the new grass of the morning—
6 ULB அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும். BSB BSB: in the morning it springs up new, but by evening it fades and withers.
7 ULB நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். BSB BSB: For we are consumed by Your anger and terrified by Your wrath.
8 ULB எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். BSB BSB: You have set our iniquities before You, our secret sins in the light of Your presence.
9 ULB எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம். BSB BSB: For all our days decline in Your fury; we finish our years with a sigh.
10 ULB எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். BSB BSB: The length of our days is seventy years—or eighty if we are strong—yet their pride is but labor and sorrow, for they quickly pass, and we fly away.
11 ULB உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்? BSB BSB: Who knows the power of Your anger? Your wrath matches the fear You are due.
12 ULB நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். BSB BSB: So teach us to number our days, that we may present a heart of wisdom.
13 ULB கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும். BSB BSB: Return, O LORD! How long will it be? Have compassion on Your servants.
14 ULB நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். BSB BSB: Satisfy us in the morning with Your loving devotion, that we may sing for joy and be glad all our days.
15 ULB தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும். BSB BSB: Make us glad for as many days as You have afflicted us, for as many years as we have seen evil.
16 ULB உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. BSB BSB: May Your work be shown to Your servants, and Your splendor to their children.
17 ULB எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும். BSB BSB: May the favor of the Lord our God rest upon us; establish for us the work of our hands—yes, establish the work of our hands!
Select verses for actions: Enter goes to them and Escape comes back.