1 ULB வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு. BSB BSB: “Surely there is a mine for silver and a place where gold is refined.
2 ULB இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். BSB BSB: Iron is taken from the earth, and copper is smelted from ore.
3 ULB மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடைசிவரை ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான். BSB BSB: Man puts an end to the darkness; he probes the farthest recesses for ore in deepest darkness.
4 ULB கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான். BSB BSB: Far from human habitation he cuts a shaft in places forgotten by the foot of man. Far from men he dangles and sways.
5 ULB பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, நெருப்பால் மாறினது போலிருக்கும். BSB BSB: Food may come from the earth, but from below it is transformed as by fire.
6 ULB அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். BSB BSB: Its rocks are the source of sapphires, containing flecks of gold.
7 ULB ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை; BSB BSB: No bird of prey knows that path; no falcon’s eye has seen it.
8 ULB கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை. BSB BSB: Proud beasts have never trodden it; no lion has ever prowled over it.
9 ULB அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேருடன் புரட்டுகிறான். BSB BSB: The miner strikes the flint; he overturns mountains at their base.
10 ULB கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். BSB BSB: He hews out channels in the rocks, and his eyes spot every treasure.
11 ULB ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான். BSB BSB: He stops up the sources of the streams to bring what is hidden to light.
12 ULB ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது? BSB BSB: But where can wisdom be found, and where does understanding dwell?
13 ULB அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை. BSB BSB: No man can know its value, nor is it found in the land of the living.
14 ULB ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. BSB BSB: The ocean depths say, ‘It is not in me,’ while the sea declares, ‘It is not with me.’
15 ULB அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது. BSB BSB: It cannot be bought with gold, nor can its price be weighed out in silver.
16 ULB ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. BSB BSB: It cannot be valued in the gold of Ophir, in precious onyx or sapphire.
17 ULB பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. BSB BSB: Neither gold nor crystal can compare to it, nor jewels of fine gold be exchanged for it.
18 ULB பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது. BSB BSB: Coral and quartz are unworthy of mention; the price of wisdom is beyond rubies.
19 ULB எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. BSB BSB: Topaz from Cush cannot compare to it, nor can it be valued in pure gold.
20 ULB இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? BSB BSB: From where, then, does wisdom come, and where does understanding dwell?
21 ULB அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. BSB BSB: It is hidden from the eyes of every living thing and concealed from the birds of the air.
22 ULB நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. BSB BSB: Abaddon and Death say, ‘We have heard a rumor about it.’
23 ULB தேவனோ அதின் வழியை அறிவார், அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும். BSB BSB: But God understands its way, and He knows its place.
24 ULB அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். BSB BSB: For He looks to the ends of the earth and sees everything under the heavens.
25 ULB அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு, BSB BSB: When God fixed the weight of the wind and measured out the waters,
26 ULB மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். BSB BSB: when He set a limit for the rain and a path for the thunderbolt,
27 ULB அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, BSB BSB: then He looked at wisdom and appraised it; He established it and searched it out.
28 ULB மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான். BSB BSB: And He said to man, ‘Behold, the fear of the Lord, that is wisdom, and to turn away from evil is understanding.’”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.