1 ULB மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். BSB BSB: Better a poor man who walks with integrity than a fool whose lips are perverse.
2 ULB ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். BSB BSB: Even zeal is no good without knowledge, and he who hurries his footsteps misses the mark.
3 ULB மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் கர்த்தருக்கு விரோதமாக எரிச்சலடையும். BSB BSB: A man’s own folly subverts his way, yet his heart rages against the LORD.
4 ULB செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். BSB BSB: Wealth attracts many friends, but a poor man is deserted by his friend.
5 ULB பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. BSB BSB: A false witness will not go unpunished, and one who utters lies will not escape.
6 ULB பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். BSB BSB: Many seek the favor of the prince, and everyone is a friend of the gift giver.
7 ULB தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. BSB BSB: All the brothers of a poor man hate him—how much more do his friends avoid him! He may pursue them with pleading, but they are nowhere to be found.
8 ULB ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். BSB BSB: He who acquires wisdom loves himself; one who safeguards understanding will find success.
9 ULB பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். BSB BSB: A false witness will not go unpunished, and one who pours out lies will perish.
10 ULB மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. BSB BSB: Luxury is unseemly for a fool—how much worse for a slave to rule over princes!
11 ULB மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. BSB BSB: A man’s insight gives him patience, and his virtue is to overlook an offense.
12 ULB ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். BSB BSB: A king’s rage is like the roar of a lion, but his favor is like dew on the grass.
13 ULB மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். BSB BSB: A foolish son is his father’s ruin, and a quarrelsome wife is like a constant dripping.
14 ULB வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. BSB BSB: Houses and wealth are inherited from fathers, but a prudent wife is from the LORD.
15 ULB சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான். BSB BSB: Laziness brings on deep sleep, and an idle soul will suffer hunger.
16 ULB கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். BSB BSB: He who keeps a commandment preserves his soul, but he who is careless in his ways will die.
17 ULB ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். BSB BSB: Kindness to the poor is a loan to the LORD, and He will repay the lender.
18 ULB நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. BSB BSB: Discipline your son, for in that there is hope; do not be party to his death.
19 ULB கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். BSB BSB: A man of great anger must pay the penalty; if you rescue him, you will have to do so again.
20 ULB உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். BSB BSB: Listen to counsel and accept discipline, that you may be wise the rest of your days.
21 ULB மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். BSB BSB: Many plans are in a man’s heart, but the purpose of the LORD will prevail.
22 ULB நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். BSB BSB: The desire of a man is loving devotion; better to be poor than a liar.
23 ULB கர்த்தருக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. BSB BSB: The fear of the LORD leads to life, that one may rest content, without visitation from harm.
24 ULB சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். BSB BSB: The slacker buries his hand in the dish; he will not even bring it back to his mouth.
25 ULB பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். BSB BSB: Strike a mocker, and the simple will beware; rebuke the discerning man, and he will gain knowledge.
26 ULB தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். BSB BSB: He who assaults his father or evicts his mother is a son who brings shame and disgrace.
27 ULB என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே. BSB BSB: If you cease to hear instruction, my son, you will stray from the words of knowledge.
28 ULB அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். BSB BSB: A corrupt witness mocks justice, and a wicked mouth swallows iniquity.
29 ULB பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது. BSB BSB: Judgments are prepared for mockers, and beatings for the backs of fools.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.